ராஜிவ் வழக்கில் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு- தீர்ப்பு ஒத்திவைப்பு!

ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர்.
ஆனால் இந்த கருணை மனு 11 ஆண்டு கால தாமதத்துக்குப் பின்னர் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது கடந்த 28-ந் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா, தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டால் அதன் அடிப்படையில் தண்டனையை குறைக்கலாம் என ஜனவரி 21ந் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது என்றார்.
இதையடுத்து கடந்த 29-ந் தேதி வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மூன்று தமிழர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பின்னர் இன்றைய தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
தூக்கை ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு
இன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதி பெஞ்ச் முன்பு விசாரணண நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாகன்வாதி, மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது. கருணை மனுவை தாமதம் செய்வதாலேயே தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது. இதுபோன்ற வழக்குகளில் தூக்கை ரத்து செய்யக் கோர முடியாது என்று வாதிட்டர்.
இதைத் தொடர்ந்து மூன்று தமிழர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யூகி சவுத்ரி, மூவரும் 20 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கின்றனர்.. தேவையற்ற காலதாமத்தால் மூன்வரும் பாதிக்கப்படுகின்றனர் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மூன்று நீதிபதி பெஞ்ச், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வைத்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications