கார் வாங்க பிளான் இருந்தா சீக்கிரம் வாங்கிடுங்க... 'செஸ்' வரி எகிறப் போகுது!
எஸ்யூவி கார்களுக்கான செஸ் வரி 15%லிருந்து 25% சதவிதமாக உயர உள்ளதால், கார்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லி: கார்களுக்கான செஸ் வரி உயர்த்தப்படவுள்ளதால் கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் விலை விரைவில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் உணவுப் பொருட்களில் இருந்து கார்கள் வரை அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிகிள் எனப்படும் எஸ்யுவி வகை கார்களின் விலை கணிசமாக உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் இவற்றுக்கு இதுவரை 15%வரை தான் செஸ் வரி விதிக்கப்பட்டு வந்தது.

10 சவீதம் கூடுதல் வரி
ஆனால், தற்போது கார் மற்றும் எஸ்யூவி வகை கார்களின் செஸ் வரி 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

செஸ் அறிவிப்பு
ஜிஎஸ்டி கவுன்சில் கொடுத்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. அதையடுத்து இதற்கான சட்ட வரையறை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு, மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம், செஸ் வரி குறித்த அறிவிக்கையை வெளியிடும்.

எஸ்யூவி விலை
தற்போது செடான் வகை கார்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும், 15% செஸ் வரியும் சேர்த்து 43% வரி விதிக்கப்படுகிறது. எஸ்யூவி வகை கார்களுக்கு 15 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது உயர்த்தப்பட்டுள்ளது. இது சொகுசு கார் மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம், டிசையர், ஸ்விப்ட், பலேனோ, ஐ20, சியஸ், ஹோண்டா சிட்டி உள்ளிட்ட ஹேட்ச்பேக் மற்றும் செடான் வகை கார்களின் விலையில் பெரிய மாறுதல்கள் ஏற்படாது.

கூடுதல் வரி
20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புல்ள கார் வாங்கினால், ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி மட்டுமல்லாது கூடுதலாக 25% வரி வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது. மிட் சைஸ் செடான் கார், பார்ச்சூனர் உளிட்ட கார்களுக்கு அதிக வரி விதிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் கார் வாங்க திட்டமிடுபவர்கள் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே, கார் வாங்குவது பணத்துக்கு பாதுகாப்பு!












Click it and Unblock the Notifications