"செயின் ஸ்மோக்கர்".. எப்ப பார்த்தாலும் சிகரெட்..நுரையீரல் புற்றுநோய் வேற.. இன்சூரன்ஸ் பெற்றது எப்படி
செயின் ஸ்மோக்கருக்கு காப்பீட்டு தொகையை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
காந்திநகர்: செயின் ஸ்மோக்கரின் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை, ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரத்தை சேர்ந்தவர் மதுகர் வோரா... இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது.. இந்த பழக்கம் நாளடைவில் அதிகமாகிவிட்டது..
ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என்று சிகரெட் பிடித்து கொண்டிருந்தவர், கடைசியில் ஒருநாளைக்கு 10க்கும் மேல் சிகரெட் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்..

செயின் ஸ்மோக்கர்
பிறகு திடீரென உடல்நிலை பாதிக்க ஆரம்பித்தது.. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை.. எனவே, கடந்த 2018 - பிப்ரவரி மாதம் ராஜ்கோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... பின்னர் மேல்சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்குதான் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக சிகிச்சையும் ஆரம்பமானது.. அப்போது மருத்துவ செலவாக ரூ.6.53 லட்சம் வசூலிக்கப்பட்டது...

இன்ஷூரன்ஸ்
அந்த செலவை காப்பீட்டு நிறுவனம் தர வேண்டும் என்று மதுகர் வோரா விண்ணப்பித்திருந்தார்... ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனமோ, அந்த பணத்தை தர மறுத்துவிட்டது.. போதைக்கு அடிமையானவர் என்ற அடிப்படையில் அவரது கோரிக்கையை நிராகரிக்கப்படுவதாகவும் கூறியது.. மதுகர் வோரா உடனே இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக, நுகர்வோர் ஆணையத்திற்கு கொண்டு சென்றார்.. இது தொடர்பான விசாரணையும் நடந்தது..

கண்டிஷன்
அப்போது காப்பீட்டு நிறுவனம் தரப்பில், "புகார்தாரர் கடந்த 40 வருடங்களாக, ஒரு நாளைக்கு 15 முதல் 20 சிகரெட்டுகள் பிடிப்பதாக எங்கள் விசாரணை மற்றும் மருத்துவமனைகளின் ஆவணங்களின் போது தெரியவந்துள்ளது. அதனால், பாலிசியின் நிபந்தனை எண் 4.8ன்படி இந்த கோரிக்கை நிராகரிப்புக்கு உட்பட்டதுதான்.. மது அல்லது போதை பொருளை பயன்படுத்துதல் அல்லது அத்தகைய துஷ்பிரயோகம் அல்லது அடிமையாதல் போன்றவற்றில் பாலிசியின் நிபந்தனையின்படி, கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்று வாதிடப்பட்டது..
Recommended Video

நிகோடின்
இதையடுத்து நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், "சிகரெட்டில் நிகோடின் கலந்திருப்பது உண்மைதான்.. ஆனால் நிகோடின் நிரூபிக்கப்பட்ட போதைப்பொருள் கிடையாது.. மேலும், சிகரெட் பயன்பாடு காரணமாக இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆதாரமற்ற ஆட்சேபனைகளை உருவாக்கி காப்பீட்டு நிறுவனம் தனது சேவையை தவறவிடுகிறது.. அது முறையன்று... போதைக்கு அவர் அடிமையாக்கவில்லை. எனவே, இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டு பணம் 6 லட்சத்துடன், 6 சதவீத வட்டி, ரூ. 5,000 ஐயும் சேர்த்து, 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications