‘சாய்வாலா மை பிஎம்’... டீக்கடைகளை பிரச்சார மேடைகளாக்கிய பாஜக : அதிர்ச்சியில் காங்கிரஸ்
பெங்களூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் நரேந்திர மோடி பெயரில் ‘சாய்வாலா நமது பிரதமர்' என்ற நூதனப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் பாஜகவினர்.
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை ‘டீ விற்றவர்' என சமீபத்தில் விமர்சித்திருந்தார் மணிசங்கர் அய்யர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அவரது பேச்சைத் தொடர்ந்து அவரைக் கண்டிக்கும் வகையிலும், பாஜகவின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கு, வகையிலும் பெங்களூரில் புதிய டீக்கடைகளை ஆரம்பித்துள்ளனர் பாஜகவினர்.
‘ டீக்கடைக்காரர் தான் என் பிரதமர்' (சாய்வாலா மை பிஎம்) என தங்களது புதிய தேர்தல் பிரச்சாரத்திற்கு பெயர் வைத்துள்ளனர் பாஜகவினர். பெங்களூர் காந்திநகரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில், அதன் மூத்த தலைவர் வெங்கையாநாயுடு தலைமையில் இந்த டீ விற்கும் நூதன போராட்டம் தொடங்கியது.

சாய்வாலா மை பிஎம்....
'சாய்வாலா மை பிஎம்' என்ற வாசகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த டீக்கடைகளில் டீ ஒரு ரூபாய்க்கு விற்கப் படுகிறது. மேலும், பல இடங்களில் இலவசமாகவே டீ வழங்குகிறார்கள். இதற்கு தேநீர் பந்தல் என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

பிரச்சாரத்தளமாகும் டீக்கடைகள்...
அதுமட்டுமின்றி இந்த டீக்க்டையில் மோடியின் வீடியோ பேச்சுக்களும் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி பாஜகவின் பிரச்சார தளமாகவும் அந்த டீக்கடை மாறி வருகிறது.

புதுவகைப் பிரச்சாரம்....
ஒரு ரூபாய்க்கு டீ என்பதால் பொதுமக்கள் பலர் அந்த டீக்கடைகளுக்கு வந்து டீ குடிக்கின்றனர். அவ்வாறு வரும்போது நரேந்திரமோடியை பற்றிய வீடியோக்களையும், கலந்துரையாடல்களையும் மிக ஆர்வத்தோடு கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை ஒரு புதுமாதிரியான பிரச்சார உத்தியாகவே பாஜகவின் செயல்படுத்த தொடங்கிவிட்டனர்.

விரிவு படுத்தத் திட்டம்...
இந்த வகை டீக்கடைகளை பெங்களூர் மட்டுமின்றி கர்நாடக முழுவதிலும் விரிவுபடுத்த மாநில பாஜகவின் முடிவு செய்துள்ளனர். விரைவில் மேலும் 200 இடங்களில் தேநீர் பந்தல்களை அமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனராம். பாஜகவினரின் இந்த அதிரடி திட்டத்தால் காங்கிரஸ் கொஞ்சம் கலங்கித் தான் போயுள்ளதாம்.

தமிழகத்திலும்....
ஏற்கனவே, தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே நரேந்திர மோடியின் பெயரில் தனியார் டீக்கடைகள் முளைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications