ஐடி ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து நீக்கம்: சந்திரபாபு அதிரடி!
ஐடி ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமானவர்.
திருப்பதி: வருமான வரி சோதனையில் சிக்கிய போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து நீக்கி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் பல்லாயிரம் கோடி ரூபாய் கான்டிராக்ட் பணிகளை சேகர் ரெட்டி செய்து வருகிறார். அவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினர்.

தோண்ட தோண்ட...
இச்சோதனையில் கணக்கில் வராத ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம் பிடிபட்டது. அத்துடன் ரூ100 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய ரூபாய் நோட்டிகள்
இன்று கூட சேகர் ரெட்டியின் வேலூர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ரூ24 கோடி பிடிபட்டது. அந்த ரூ24 கோடியும் புதிய ரூ2,000 நோட்டுகளாக இருந்தது.

யாருடைய பினாமி
கருப்பு பண முதலையான சேகர் ரெட்டி யார் யாருக்கு நெருக்கமானவர்? யாருடைய பினாமி என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆந்திர அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

சந்திரபாபு நாயுடு அதிரடி
இதனை ஏற்று சேகர் ரெட்டியை இன்று திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து நீக்கி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். சேகர் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவுக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications