Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு 'பெத்த' பொறுப்பு! ஐடி அமைச்சராக நியமனம்! 3வது பெரிய கை இவர்தான்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப் பெற்றது. இந்நிலையில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற நிலையில், அவரது மகனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு இருந்த காலத்தில், ஒஎஸ்ஆர் காங்கிரசார் தன்னை இழிவுப்படுத்திவிட்டதாக கூறி அவர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்ததார். "நான் மீண்டும் முதலமைச்சராக தான் இந்த அவைக்குள் வருவேன்" என்று அவர் சபதமேற்றிருந்தார். அதேபோல தற்போது மீண்டும் முதல்வராக சட்டப்பேரவை அவைக்குள் நுழைத்திருக்கிறார்.

Chandrababu Naidu Telugu Desam Party Andhra Pradesh

இந்த முறை பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் சேர்ந்து சந்திரபாபு நாயுடு தேர்தலை எதிர்கொண்டார். அவர் எதிர்பார்த்தபடி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 88 தொகுதிகளை வென்றால் ஆட்சியமைக்கலாம். சந்திரபாபு நாயுடு 135 தொகுதிகளை வென்றார். பவன் கல்யான் 21 தொகுதிகளை கைப்பற்றினார்.

கடந்த முறையை விட இந்த முறை சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்கு விகிதம் 6.43% ஆக அதிகரித்தது. அதேபோல 112 தொகுதிகளை இந்த முறை கூடுதலாக தெலுங்கு தேசம் கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 11ம் தேதி சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில் இன்று அமைச்சர்களுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்படி

சந்திரபாபு நாயுடு (முதலமைச்சர்) - ஜிஏடி, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும்

பவன் கல்யாண் (துணை முதல்வர்) - பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல், சுற்றுச்சூழல், காடு, அறிவியல் & தொழில்நுட்பம்

நாரா லோகேஷ் (சந்திரபாபு நாயுடுவின் மகன்) - மனித வள மேம்பாடு, ஐடி எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், RTG

கிஞ்சராப்பு அட்சண்னைடு - விவசாயம், கூட்டுறவு, சந்தைப்படுத்தல், கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு & மீன்பிடி

கொல்லு ரவீந்திர - சுரங்கம் & புவியியல், கலால் வரி

நாதெண்டலா மனோகர் - உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், நுகர்வோர் விவகாரங்கள்

பொங்குரு நாராயணா - நகராட்சி நிர்வாகம் & நகர்ப்புற வளர்ச்சி

அனிதா வாங்கலபுடி - உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை

சத்ய குமார் யாதவ் - மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலன் & மருத்துவக் கல்வி

டாக்டர் நிம்மலா ராமாநாயுடு - நீர்வள மேம்பாடு

நசியம் முகமது பாரூக்- சட்டம் & நீதி, சிறுபான்மையினர் நலன்

ஆனம் ராம்நாராயண ரெட்டி - அறநிலையத்துறை

பையாவுல கேசவ் - நிதி, திட்டமிடல், வணிக வரிகள் & சட்டமன்றம்

அனகனி சத்ய பிரசாத் - வருவாய், பத்திர பதிவுத்துறை

கொலுசு பார்த்தசாரதி - வீட்டுவசதி

டாக்டர் டோலா பால வீராங்கனேய சுவாமி - சமூக நலன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன், சசிவாலயம் & கிராம தன்னார்வலர்

கோட்டிப்பட்டி ரவிக்குமார் - மின்சாரம்

கந்துலா துர்கேஷ் - சுற்றுலா, கலாச்சாரம்

கும்மாடி சந்தியா ராணி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், பழங்குடியினர் நலன்

BC ஜனார்தன் ரெட்டி - சாலைகள், உள்கட்டமைப்பு & முதலீடுகள்

டி.ஜி. பரத் - தொழில் & வர்த்தகம், உணவு பதப்படுத்தும்முறை

எஸ்.சவிதா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் நலன், கைத்தறி மற்றும் ஜவுளி

வாசம்செட்டி சுபாஷ் - தொழிலாளர், தொழிற்சாலைகள், மருத்துவ சேவைகள்

கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ் - எம்எஸ்எம்இ; என்ஆர்ஐ அதிகாரம்

மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி - போக்குவரத்து, இளைஞர் & விளையாட்டு

என அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், சந்திரபாபுவுக்கு அடுத்த இடத்தில் பவன் கல்யாண் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல, மூன்றாவது இடத்தில் சந்திரபாபுவின் மகன் லோகேஷின் பெயர் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+