ஜூலை 22-ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ அறிவிப்பு
ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் 2 விண்கலம் வரும் ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த 15-ம் தேதி திட்டமிட்டப்படி சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவ தயாரான போது, கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக கவுண்டவுன் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சந்திராயன் 2 விண்ணில் செலுத்துவது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 22-ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என இஸ்ரோ கூறியுள்ளது.

நிலவை ஆராய சந்திரயான் என்ற பெயரில் விண்வெளி திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் உதவியோடு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. இதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.
இந்நிலையில் எந்த நாடுமே இதுவரை கால்பதிக்காத நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை தயார் செய்தது. நிலவின் மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பிற்கு அடியில், நிலவின் வெளிப்புறத்தில் தண்ணீர் மூலக்கூறுகளின் விநியோக அளவு ஆகியவற்றை கண்டறிய செய்வதற்காக சந்திரயான்-2 உருவாக்கப்பட்டது.
நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை இறக்கி, வரலாற்று சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது இஸ்ரோ. சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதற்காக கடந்த 14-ம் தேதி காலை 20 மணி நேர கவுண்டவுன் துவங்கியது.
தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து சந்திரயான் 2, விண்ணில் செலுத்தப்பட இருந்தது.
ஆனால் ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திராயன் 2 விண்கலத்தை ஏவ சரியாக 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும் போது, கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் சந்திராயன் 2 ஏவுவது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தது இஸ்ரோ.
இந்நிலையில் வரும் 22-ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications