வரட்டா மாமே டுர்ர்ர்.. நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்-3.. அடுத்து என்ன?
ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. அடுத்தக்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு நாளை இரவு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியைச் சுற்றி தனது சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி வந்தது.

இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 26ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உந்தித் தள்ளப்பட்டது.
இந்நிலையில், நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நுழைந்துள்ளது. இன்று இரவு 7.15 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது சந்திரயான். நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது. இதன்மூலம், விண்வெளித் துறையில் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
கடந்த 20 நாட்களாக பூமியிலிருந்து நிலவை நோக்கி 3.84 லட்சம் கி.மீ தூரம் சந்திரயான் 3 விண்கலம் பயணித்துள்ளது. தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ள சந்திராயன்-3 விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசையால் இயக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் சுற்றுவட்டப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை நாளை (ஆகஸ்ட் 6ஆம் தேதி) இரவு 11 மணிக்கு மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும், அடுத்த 19 நாள்கள் மிக முக்கியமானமவை என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications