வாவ்.. நெருங்கிடுச்சே.. நிலவில் இருந்து வெறும் 1,437 கி.மீ தூரத்தில் சந்திரயான் 3.. ஹாய் சொல்ல ரெடி!
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று சந்திரயான் -3 இன் அடுத்தகட்ட சுற்றுப்பாதை குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது. சந்திரயான்-3 இப்போது நிலவில் இருந்து வெறும் 1,437 கிமீ தொலைவில் உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட மும்பை - டெல்லி இடைப்பட்ட தொலைவு தான்.
இந்தியா சார்பில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியைச் சுற்றி தனது சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி வந்தது.

நெருங்கி வரும் சந்திரயான் 3: பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தைக் சிறிது சிறிதாக அதிகரிக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். கடந்த ஜூலை 26ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது சந்திரயான்-3. அப்போது சந்திரயான் 3 எடுத்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது.
நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குச் சென்றவுடன் சந்திரயான்-3-ன் உயரமானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் சுற்று வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதை 174 கி.மீ * 1437 கிமீ என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வெறும் 1,437 கி.மீ தொலைவில்: பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் (ISTRAC) மையத்தில் இருந்து இன்று சந்திரயான் -3 இன் சுற்றுப்பாதை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலம் இப்போது நிலவில் இருந்து வெறும் 1,437 கிமீ தொலைவில் உள்ளது.
அடுத்தகட்ட சுற்று வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கை வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 11.30 முதல் 12.30 வரை நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 14 அன்று மேற்கொள்ளும் அடுத்த நகர்வின் மூலம் இஸ்ரோ விண்கலத்திற்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை மேலும் குறைக்கும்.

சரியாக 5.47 மணிக்கு: ஆகஸ்ட் 16 அன்று, சந்திரயான்-3 விண்கலம் 100 கி.மீ வட்ட சுற்றுப்பாதையில் நுழையும். ஆகஸ்ட் 17 அன்று, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய தரையிறங்கும் தொகுதி உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிந்து செல்லும். தரையிறங்கும் தொகுதி பிரிந்ததும், அதனை 30 கி.மீ x 100 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகர்த்துவார்கள். ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட உள்ள நிலையில், லேண்டரில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் என்னவாகும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இதுதொடர்பாகப் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், அனைத்து சென்சார்களும் செயலிழந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். என்ஜின்களே வேலை செய்யாவிட்டாலும் விக்ரம் தரையிறங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications