சென்னை குண்டு வெடிப்பு: பெங்களூருவில் 2 பேர் கைது!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூருவில் 2 சதிகாரர்களை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே 1- ந் தேதி காலையில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற இளம்பெண் பலியான நிலையில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயிலில் குண்டுவெடித்த பெட்டிகளில் கடந்த 2 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். மற்றொரு பிரிவு சூப்பிரண்டு அன்பு தலைமையில் நேற்று முன் தினமே பெங்களூர் சென்றது ஒரு குழு.
அங்கு பெங்களூர் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டிருந்த நடைமேடையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் சென்னை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் பெங்களூரில் சிக்கியுள்ளனர்.
மத்திய உளவு பிரிவினர் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இவர்கள் இருவரும் பிடிபட்டுள்ளனர். இந்த 2 பேரும் குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு உதவிகள் செய்தார்களா? அல்லது குண்டு வெடிப்பு நாசவேலையில் நேரடியாக ஈடுபட்டார்களா?என்பது குறித்து விசாரணை ந்டைபெற்று வருகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா பெங்களூருக்கு விரைந்துள்ளார்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications