Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க பெண்ணை விரும்பினால்.. இந்தா இந்த விஷத்தை குடி.. காதலை நிரூபிக்க இளைஞர் செய்த செயல்.. போச்சி

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: ‛‛எங்க பெண்ணை உண்மையாக காதலிக்கிறாய் என்றால் இந்த விஷத்தை குடி' என்று காதலியின் குடும்பத்தினர் கூறியதை கேட்டதும், காதலை நிரூபிக்க அவர்கள் கொடுத்த விஷத்தை குடித்த 22 வயது இளைஞர் 13 நாள் சிகிச்சைக்கு பிறகு பலியானார். இந்த சம்பவம் குறித்த சோகமான தகவல் வெளியாகி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள தியோபாஹ்ரி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் பாண்டோ (வயது 22). இவருக்கும் சோனாரி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர். இந்த நட்பு காதலாக மலர்ந்தது.

chhattisgarh-22-year-old-youth-consumes-poison-to-prove-his-love-for-girlfriend-now-died

இருவரும் தங்களின் வீடுகளுக்கு தெரியாமல் காதலிக்க தொடங்கினர். அடிக்கடி யாருக்கு தெரியாமல் ஜோடி சேர்ந்து ஒன்றாக உலா வந்துள்ளனர். இதற்கிடையே கிருஷ்ணகுமாரின் காதல் விவகாரம் அவரது காதலின் குடும்பத்துக்கு தெரியவந்தது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பிறகு கடந்த மாதம் 25ம் தேதி கிருஷ்ணகுமாரை, காதலியின் பெற்றோர் போன் செய்து வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். கிருஷ்ணகுமாருடன் சோனாரி கிராமத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார். அப்போது இருவரின் காதல் பற்றி கேட்டனர். அதன்பிறகு உண்மையாக காதலிக்கிறாயர் என்றால் இந்த விஷயத்தை குடி என்று கிருஷ்ணகுமாரிடம் கூறியுள்ளனர்.

அப்போது தனது காதல் உண்மை தான் என்பதை நிரூபிக்க கிருஷ்ணகுமார் விஷத்தை குடித்தார். அடுத்த சில நிமிடங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக கிருஷ்ணகுமாரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று உயிருக்கு போராடிய கிருஷ்ணகுமாரை பார்த்து அழுதனர்.

மருத்துவமனையில் தொடர்ந்து கிருஷ்ணகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் கடந்த 8 ம் தேதி சிகிச்சை பலனின்றி கிருஷ்ணகுமார் இறந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகுமாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் லெம்ரூ போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காதலியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+