சத்தீஸ்கர் தேர்தல்.. ஒன்றல்ல. இரண்டல்ல.. மூன்று முறை.. பாஜக காங்கிரஸ் இடையே இப்படி ஒற்றுமை!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்கள் 2023: இந்த மாநிலத்தின் முதல் மூன்று தேர்தல்களில், அதாவது 2003 முதல் 2013 வரை பாஜக காங்கிரஸ் இடையே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒற்றுமை உள்ளது. அதனை இப்போது பார்ப்போம்
மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து 2000 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவானது. இங்கு முதல் மாநில சட்டசபை தேர்தல் 2003ல் தான் நடந்தது. இதில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அப்போது 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன.

அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து 2008லும் அப்படியே தான் தொடர்ந்து. அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 இடங்களில் வென்றது. ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்றது.காங்கிரஸ் 39 இடங்களில் தான் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 2003 முதல்2013 வரை நடந்த 3 சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால் வெற்றி பெற்ற 3 முறையும் ஒரேமாதிரியாகவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எம்எல்ஏ சீட்டுகளை பெற்றிருந்தன. 49 அல்லது 50 என்று பாஜகவும் 37 அல்லது39 என காங்கிரஸ் கட்சியும்பெற்றிருந்தன.
ஆனால் 2018ல் தான் அப்படியே அடியோடு மாறியது. இந்த முறை பாஜக மிக மோசமாக தோற்றுப்போனது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது. பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 7 இடங்களில் தான் வெற்றி பெற்றன.
2009 மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மொத்தம் உள்ள 11 இடங்களில் பாஜக 10 இடத்தில் வென்றது.காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் தான் வென்றது. 2019ம் ஆண்டு பாஜக ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது.காங்கிரஸ் கட்சியால் வெறும் இரண்டு இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. 2018 சட்டசபைதேர்தல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெற்றபோதும், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஆண்டு சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டியாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications