சத்தீஷ்கரில் வெற்றி யாருக்கு? அடித்து ஆடும் காங்கிரஸ்.. அதோ கதியில் பாஜக.. கருத்து கணிப்பு
ராய்பூர்: காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஷ்கரில், எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை பார்க்கலாம்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து கடந்த 2000 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவானது. இங்கு முதல் மாநில சட்டசபை தேர்தல் 2003-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் 2008 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் தொடர்ந்தது.

அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 - இடங்களில் வென்றது. ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. ஆனால் 2018-ல் தான் அப்படியே அடியோடு மாறியது. இந்த முறை பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்தது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது. பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 7 இடங்களில் தான் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், சத்தீஷ்கரில் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஷ்கரில் இந்த முறை காங்கிரஸ் வெற்றி ஆட்சியை தக்க வைக்கும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சி 45 முதல் 51 இடங்களிலும் பாஜக 36 42 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. சத்தீஷ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications