இது வேற மாதிரி.. மகளிருக்கு 1250 ரூபாய் தருவதாக வாக்குறுதியளித்தும்.. சத்தீஸ்கரில் தோற்ற காங்கிரஸ்
ராய்ப்பூர்: தமிழகத்தை போல் சத்தீஸ்கரில் மகளிருக்கு ரூ 1000 வழங்குவதாக பாஜக அறிவித்த நிலையில் அதைவிட கூடுதலாக 1250 ரூபாய் வழங்குவதாக அறிவித்தும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகஸ்ல் ஆதிக்கம் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதாவது நவம்பர் 7, 17 ஆகிய இரு தேதிகளாகும். இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அது போல் 11 லோக்சபை தொகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 46 இடங்களில் வென்றால் அந்த கட்சியே ஆட்சியை அமைக்கும்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்தது. வெறும் 15 இடங்களில் வென்று பாஜக தோல்வி அடைந்தது. 5 தொகுதிகளில் வென்றது முன்னால் முதல்வர் அஜித் ஜோகியின் கட்சி. அந்த வகையில் இந்த முறை பாஜக, காங்கிரஸுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக வென்றால் என்னென்ன நலத்திட்டங்களை மக்களுக்கு செய்யும் என்பது குறித்த தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் முக்கியமானவை என்ன தெரியுமா?
*சத்தீஸ்கரில் 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு பதவிகளை நிரப்புவது
*ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஒரு சிலிண்டர் ரூ 500 க்கு விற்பனை செய்யப்படும்
*நேரடி மானியத் திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் பயண படி வழங்கப்படும்.
*பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 18 லட்சம் வீடுகளை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் இரு ஆண்டுகளுக்குள் வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் (Ghar Ghar Nirmal Jal Abhiyan) குழாய் இணைப்பு வழங்கப்படும்.
*ஆண்டுதோறும் நிலமில்லாத விவசாய தொழிலாளர்களுக்கு ரூ 10000 தீனதயாள் உபாத்யாய திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
*திருமணமான பெண்களுக்கு ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
*விவசாயிகளிடம் இருந்து குவிண்டால் ரூ 3100 க்கு நெல் கொள்முதல்
*அயோத்தியாவில் உள்ள ராமர் கோயிலுக்கு சத்தீஸ்கர் மக்களை அழைத்து செல்வது
உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை திட்டம் அரசுக்கு நற்பெயரை தேடித் தந்துள்ளது. இதன் மூலம் நிறைய ஏழை பெண்கள் பயனடைகிறார்கள். அந்த திட்டத்தை சத்தீஸ்கரில் பாஜக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
எத்தனையோ நல்ல திட்டங்களை அறிவித்தும் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்து வருகிறது. சத்தீஸ்கரில் மகளிருக்கு ரூ 1250 அளிப்பதாக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தும் அக்கட்சி சோபிக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்படி காங்கிரஸ் ஒரு சிறிய மாநிலத்தில் தோல்வியை தழுவி வருவது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications