தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு வரி விலக்கு கோரும் காங். முதல்வர்! இன்று தியேட்டரில் படம் பார்க்கிறார்
ராய்பூர்: பாலிவுட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
பிரபல இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் வெளியானது.
இதில் விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

பிரதமர் மோடி பாராட்டு
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் சலுகை
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கேரள மாநில காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது.

சத்தீஸ்கர் முதலமைச்சர் ட்வீட்
இதனிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெலும் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடி, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மீது விதிக்கப்பட்டு உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியை விலக்க வேண்டும். அதுபோல் செய்தால் நாடு முழுவதும் இப்படம் வரி விலக்கு பெற்றதாகி விடும்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெலும் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடி, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மீது விதிக்கப்பட்டு உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியை விலக்க வேண்டும். அதுபோல் செய்தால் நாடு முழுவதும் இப்படம் வரி விலக்கு பெற்றதாகி விடும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
"இன்று இரவு 8 மணிக்கு தலைநகர் ராய்பூரில் உள்ள சினிமா ஹாலில் சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பார்க்க அழைக்கிறேன்." என்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு முலமைச்சர் பாஜகவினரால் பாராட்டப்படும் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு வரி விலக்கு கோரி இருப்பது பொதுமக்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications