பசுவை கொல்பவர்களை தூக்கில் போடுவேன்.. சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பேச்சு!
ராய்ப்பூர்: பசுவை கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என்று சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகளுக்கும், இறைச்சி வெட்டும் கூடங்களுக்கும் அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அனுமதியற்ற இறைச்சிக் கடைகள், கூடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் விலங்குகளை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி பசுக்களை கொன்றால் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பசுக்களை கொல்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங், 'மாட்டைக் கொன்றால் தூக்கில் போடுவேன்' என்று கூறியுள்ளார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பசுவைக் கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications