சட்டிஸ்கர் இறுதிக்கட்ட சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது.. 65% வாக்குகள் பதிவு!
சட்டிஸ்கரில் இன்று கடைசிகட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
Recommended Video

ராய்பூர்: சட்டிஸ்கரில் இன்று கடைசிகட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இந்திய அரசியலில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்த போகும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் தொடங்கி உள்ளது. அதில் சட்டிஸ்கர் மாநிலம் முதலாவதாக தேர்தலை சந்தித்துள்ளது. இன்று அங்கு இரண்டு மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது.
அங்கு ராமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து தேர்தல் நடக்கிறது. 15 வருட பாஜக ஆட்சியை அங்கு முறியடிக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. .

மொத்தம் எத்தனை
சட்டிஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. அதில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே தேர்தல் கடந்த 12ம் தேதி நடந்து முடிந்துவிட்டது. நக்சல் பாதிப்பு உள்ள இடங்கள் என்பதால் அங்கு ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

மீதம் உள்ளது
இந்த நிலையில் இன்று மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. டிசம்பர் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று தேர்தல் நடந்த உள்ள 72 தொகுதிகளும் பெரிய அளவில் நக்சல் தாக்குதல் இல்லாத தொகுதிகள் ஆகும்.

எத்தனை
மொத்தம் 19 மாவட்டங்களில் இந்த 72 தொகுதிகள் உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 76.28 வாக்குகள் பதிவானது. 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 19,000 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்தது
8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 72 தொகுதிகளில் மொத்தம் 65 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. நக்சலின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்த போதும் கூட சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications