சத்தீஸ்கர் லோக்சபா தொகுதி! 11 தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களின் முழு விவரம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை பாஜக வென்றது. ஒரு தொகுதியை காங்கிரஸ் பிடித்தது. மொத்தம் 11 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
நக்ஸலைட்களை அதிகம் கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 11 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் பாஸ்டர், பிலாஸ்பூர், துர்க், ஜன்ஸ்கிர் சம்பா, கான்கெர், கோர்பா, மஹாசமுந்த், ராய்கர், ராய்பூர், ராஜ்நந்த்கான், சுர்குஜா ஆகியவைதான் அந்த 9 தொகுதிகளாகும்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சத்தீஸ்கர் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வென்றது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும் பாஜக 9 இடங்களையும் வென்றது.
இந்த முறை காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்ததாக சொல்லப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பாஜக சத்தீஸ்கரில் அதிக இடங்களை வென்று 3ஆவது முறையாக சாதனை படைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை வெளியானது. அதில் 11 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது.
2024 இல் சத்தீஸ்கர் லோக்சபா தொகுதியில் வென்றவர்கள்
பாஸ்டர்- மகேஷ் காஷ்யப்- பாஜக- 55245
பிலாஸ்பூர்- டோக்ஹான் சாஹு- பாஜக- 164558
துர்க்- விஜய் பாகல்- பாஜக- 438226
ஜன்ஜ்கிர் சம்பா- கமலேஷ் ஜஞ்ச்டே- பாஜக- 60000
கான்கர்- போஜ்ராஜ் நாக்- பாஜக- 1884
கோர்பா- ஜோத்ஸ்னா சரண்தாஸ் மஹந்த்- காங்கிரஸ்- 43283
மஹாசமுந்த்- ரூப் குமாரி சவுத்ரி- பாஜக- 145456
ராய்கார்- ராதேஷியாம் ரதியா- பாஜக- 240391
ராய்ப்பூர்- பிரிஜ்மோகன் அகர்வால்- பாஜக- 575285
ராஜ்நந்த்கான்- சந்தோஷ் பாண்டே- பாஜக- 44411
சுர்குஜா- சிந்தாமணி மகாராஜ்- பாஜக- 64822
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications