பெகாசஸ் உளவு.. நாட்டிலேயே முதலாவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட சட்டீஸ்கர் அரசு
பெகாசஸ் சாப்ட்வேர் மூலம், உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பஹெல் உத்தரவிட்டுள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட ஒரே மாநிலம் சட்டீஸ்கர் ஆகும்.
Recommended Video
இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு நாட்டிலும் முக்கிய தலைவர்கள் அந்த நாட்டு அரசாங்கத்தால் வேவு பார்க்கப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் எதிர் கட்சிகள் மத்திய அரசை நோக்கி இந்த விவகாரம் தொடர்பாக குற்றஞ்சாட்டுகின்றனர் இருப்பினும் இன்னும் விசாரணை நடத்துவதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் வேவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்தான் சட்டீஸ்கர் மாநிலத்தில் உளவு விவகாரம் தொடர்பான புகார்களை விசாரிக்க முதல்வர் பூபேஷ் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது.
முதல்வர் அளித்த பேட்டியில் சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் இந்த வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சட்டீஸ்கரில் காங்கிரஸ் அரசு நடைபெற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications