Chhattisgarh Lok Sabha Election Results Live:நக்ஸல் மண்ணில் 10 தொகுதிகளை அலேக்காக அள்ளிய பாஜக

Subscribe to Oneindia Tamil

பாட்னா: சத்தீஸ்கர் லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சத்தீஸ்கரில் 3 முறை நடந்த லோக்சபா தேர்தல்களிலும் பாஜகவே வென்றுள்ளது.

நக்ஸலைட்களை அதிகம் கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 11 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் பாஸ்டர், பிலாஸ்பூர், துர்க், ஜன்ஸ்கிர் சம்பா, கான்கெர், கோர்பா, மஹாசமுந்த், ராய்கர், ராய்பூர், ராஜ்நந்த்கான், சுர்குஜா ஆகியவைதான் அந்த 9 தொகுதிகளாகும்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சத்தீஸ்கர் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வென்றது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும் பாஜக 9 இடங்களையும் வென்றது.

இந்த முறை காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே போட்டி கடுமையாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பாஜக சத்தீஸ்கரில் அதிக இடங்களை வென்று 3ஆவது முறையாக சாதனை படைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக எழுச்சியுடன் அதிக இடங்களில் வென்றது., இதுவே லோக்சபா தேர்தலிலும் பாஜகவின் ஆதிக்கம் செலுத்த போவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. துர்க் லோக்சபா தொகுதியில் பாஜகவின் விஜய் பாகலுக்கும் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர சாஹூவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

11 லோக்சபா தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் பாஜக 10 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றது. இதன் மூலம் பாஜக மூன்றாவது முறையாக அதிக அளவிலான லோக்சபா தொகுதிகளை சத்தீஸ்கரில் பெற்றுவிட்டது. பாஸ்டர், துர்க், ஜன்ஜ்கிர் சம்பா, சுர்குஜா உள்ளிட்ட தொகுதிகளின் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. துர்க் தொகுதியில்தான் பாஜகவின் விஜய் பாகல் வென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+