Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

47 வயது ரவுடியின் லவ் 'ப்ரப்போஸ்'.. ஏற்க மறுத்த 16 வயது சிறுமி.. சாலையில் வைத்தே.. பரிதாபம்

குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறார் அந்த சிறுமி. இந்நிலையில், அந்த சிறுமியை பார்த்ததும் ரவுடி ஓம்கார் திவாரிக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது.

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 47 வயது ரவுடி, 16 வயது சிறுமியை கத்தியால் வெட்டிக்கொண்டே சாலையில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது.

ரவுடியின் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.

'அடிதடி' திரைப்படம்

'அடிதடி' திரைப்படம்

நடிகர் சத்யராஜ் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் அடிதடி. அதில் கிட்டத்தட்ட 45 வயது ரவுடி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் சத்யராஜுக்கு ஒரு கல்லூரி மாணவியின் மீது காதல் வரும். ஆனால், தனது காதலை கல்லூரி மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரமடையும் அந்த ரவுடி பல வகையில் டார்ச்சர் கொடுப்பார். இந்நிலையில், திரைப்பட பாணியிலேயே ஒரு கொடூர சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.

 பயங்கர ரவுடி

பயங்கர ரவுடி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் குதியாரி பகுதியைச் சேர்ந்தவர் ஓம்கார் திவாரி (47). அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வருபவர். இவர் மீது ஏராளமான கொலை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக 5-க்கும் மேற்பட்ட சிறு கடைகள் இருக்கின்றன. இதனிடையே, திவாரிக்கு சொந்தமான ஒரு கடையில் 16 வயது சிறுமி ஒருவர் அண்மையில் வேலைக்கு சேர்ந்தார்.

சிறுமி மீது காதல்

சிறுமி மீது காதல்

குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறார் அந்த சிறுமி. இந்நிலையில், அந்த சிறுமியை பார்த்ததும் ரவுடி ஓம்கார் திவாரிக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. இந்த சூழலில், அந்த சிறுமியிடம் சில தினங்களுக்கு முன்பு ஓம்கார் திவாரி தனது காதலை தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த வாரம் நாம் திருமணம் செய்துகொள்ள போகிறோம் எனவும் கூறியுள்ளார்.

கத்தியால் வெட்டிக் கொண்டே..

கத்தியால் வெட்டிக் கொண்டே..

அதன்படி, நேற்று தனது ஆட்களுடன் அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்ற திவாரி, முறைப்படி பெண் கேட்டுள்ளார். இதில் பயந்து போன அந்த சிறுமியும், அவரது பெற்றோரும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். தனது சகாக்களின் முன்னிலையில் சிறுமி இவ்வாறு கூறியது திவாரிக்கு பெரும் அவமானமாக இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த சிறுமியின் முடியை பிடித்து சாலையில் இழுத்துச் சென்றார். பின்னர் தான் வைத்திருந்த பட்டா கத்தியால் அந்த சிறுமியை வெட்டிக்கொண்டும், குத்திக்கொண்டும் இழுத்துச் சென்றார்.

பரிதாபம்.. கைது

பரிதாபம்.. கைது

இதில் ரத்தம் வழிய வழிய கதறிய அந்த சிறுமி, தன்னை யாராவது காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். ஆனால், ரவுடி திவாரியை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லாதால் அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். இதனிடையே, அந்த சிறுமியை ரத்த வெள்ளத்தில் அப்படியே சாலையில் போட்டுவிட்டு அவர் சென்றார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிறுமி மீது ரவுடி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, ரவுடி திவாரியை போலீஸார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+