இந்த அக்கிரமத்தை பாருங்க... வகுப்பறையில் வாத்தியாருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்- வைரலாகும் வீடியோ
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு வகுப்பறையிலேயே பள்ளி மாணவர் மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் ஆசிரியர் ஒருவருக்கு காலில் மசாஜ் செய்வதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் ஆசிரியர் தரையில் குப்புற படுத்து காலை தூக்கி நீட்ட, மாணவர்கள் 2 பேர் பாதத்தை அமுக்கி மசாஜ்செய்துவிடுகின்றனர்... ஆசிரியரும் சொகுசுகாக உறங்குகிறார்...
சக ஆசிரியர், ஆசிரியைகள் இதை கண்டுகொள்ளாமல் நடமாடுகின்றனர்... இந்த வீடியோ ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களை படிக்க பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்களா? அல்லது ஆசிரியர்களுக்கு மசாஜ் செய்யவா?












Click it and Unblock the Notifications