இந்தியா அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன்... டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
டெல்லி: இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சிபிஐ அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் நிழல் உலக தாதாவாக விளங்கியவர் சோட்டா ராஜன் (55). இவர் மீது 70க்கும் அதிகமான கொலை, கடத்தல் வழக்குகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென இந்தியாவில் இருந்து, சி.பி.ஐ., மற்றும் மும்பை போலீசார் அடங்கிய குழு, இந்தோனேஷியா சென்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சோட்டா ராஜனை இந்தியா அனுப்ப இந்தோனேஷியா சம்மதித்தது.
ஆனால், சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வர இயற்கை ஒத்துழைக்கவில்லை. எரிமலை சீற்றம் காரணமாக பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.
நேற்று நிலைமை சீரானதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை அழைத்துக் கொண்டு சிபிஐ அதிகாரிகள் தனி விமானத்தில் இந்தியா புறப்பட்டனர். இன்று காலை 5.45 மணியளவில் அவர்கள் டெல்லி பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து சோட்டா ராஜனை சிபிஐ அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இன்று அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சோட்டா ராஜன் அழைத்து வரப்பட்டதால் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதோடு, சோட்டா ராஜன் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டுமின்றி, டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாவூத் கோஷ்டியால் ராஜனுக்கு ஆபத்து இருப்பதால் இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications