இந்தோனேசியாவில் சக கைதிகளால் உயிருக்கு ஆபத்து...சோட்டா ராஜன் தனி சிறைக்கு மாற்றம்!
பாலி: இந்தோனேசிய தென்பசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜனுக்கு சக கைதிகளினால் கொலை மிரட்டல் வந்துள்ளதால் தனி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் வலது கரமாக திகழ்ந்தவர் சேட்டாராஜன். 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தாவூத் இப்ராகிமை விட்டு சோட்டா ராஜன் பிரிந்தார்.

கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சோட்டா ராஜன் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார். எனவே, இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் தலைமறைவாக தங்கியிருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்திய போலீசுக்கு சிம்ம சொப்பனமாகவும், சர்வதேச போலீசுக்கு தண்ணி காட்டிய நிழல் உலக தாதா சோட்டா ராஜனை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி இந்தோனேசியாவின் பாலித்தீவில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை பாலித்தீவில் உள்ள தென் பசார் சிறையில் போலீசார் அடைத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சக கைதிகளின் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் காரணமாக நேற்று நள்ளிரவு அவர் சிறையில் உள்ள தனிஅறைக்கு மாற்றப்பட்டார். மற்ற கைதிகளிடம் இருந்து தன்னுடைய உயிருக்கு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே சோட்டா ராஜன் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications