சோட்டா ராஜனை தீர்த்துக் கட்டும் சோட்டா ஷகீலின் சதி முறியடிப்பு: 4 பேர் கைது
டெல்லி: தாதா சோட்டா ராஜனை கொலை செய்யும் தாதா சோட்டா ஷகீலின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
தாதா சோட்டா ராஜன் திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவரை கொலை செய்ய தாதா சோட்டா ஷகீல் திட்டமிட்டார். இதற்காக அவர் டெல்லியை சேர்ந்த ராபின்சன், ஜுனைத், யூனுஸ் மற்றும் மனிஷ் ஆகியோரை ஏற்பாடு செய்தார்.

அவர்களுடன் போனில் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் அவர்களின் செல்போன் பேச்சை இடைமறித்துக் கேட்டபோது ஷகீலின் திட்டம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றம் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அந்த 4 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த நான்கு பேரிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன்(55) கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications