For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடியாப்ப சிக்கலில் ப. சிதம்பரம்: 80:20 தங்க திட்டம் பற்றி துருவித் துருவி கேட்கும் பாஜக

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    சிதம்பரம் செய்தது ஊழல் இல்லையா? - ரவி ஷங்கர் கேள்வி.

    டெல்லி: மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் விரைவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய சட்ட துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    Chidambaram pushed 80:20 gold scheme despite DRI warning on black money and laundering

    அப்போது அவர் கூறியதாவது,

    வருவாய் புலனாய்வுத் துறை எச்சரித்தும் ப. சிதம்பரம் 80: 20 தங்க திட்டத்தை அமல்படுத்தினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி நாட்களில் அந்த திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஏன் அவசர அவசரமாக ஒப்புதல் அளித்தது.

    மே 16ம் தேதி ப. சிதம்பரம் எடுத்த முடிவு தான் வெட்கம்கெட்டத்தனத்தின் உச்சம். நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே சிதம்பரம் கொண்டு வந்த 80:20 தங்க திட்டத்தை ரத்து செய்தது.

    80:20 தங்க திட்டத்திற்கு எதிராக ரிசர்வ் வங்கி எச்சரித்தும் அதை அமல்படுத்தியுள்ளார். சிதம்பரம் தயவு செய்து பதில் சொல்லுங்கள். இது ஊழல் இல்லையா? கீதாஞ்சலி ஜெம்ஸுக்காக லாபி செய்தவர்கள் யார் என்பதை காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும்.

    பாஜக அரசில் ஊழல்வாதிகள் யாரையும் விட மாட்டோம். காங்கிரஸுக்கு சீர்திருத்தம் பிடிக்காது. அதனால் தான் ஆதார், ஜி.எஸ்.டி.க்கு எதிராக இருந்தது. அந்த திட்டங்கள் அமலுக்கு வந்தால் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்பதால் அவர்களுக்கு பிடிக்கவில்லை.

    ராகுல் காந்தி இத்தாலியில் இருந்து வந்த உடன் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    English summary
    Former Union Minister, P Chidambaram would find himself in a spot of bother after the Public Accounts Sub Committee sought a CBI probe against him for the controversial 80:20 gold import scheme. The PAC has alleged that Chidambaram had ignored objections of the Department of Revenue Intelligence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X