ஆளுநர் ஆர். என். ரவி - பாதுகாப்பு விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன?
ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க திருக்கடையூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, அவர் வருகையின்போது நடைபெற்ற போராட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) தெளிவான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.
- ஸ்டாலின் விளக்கம்: ஆளுநரோடு விரோதம் இல்லை, ஆனால் ஏன் தேனீர் விருந்துக்குப் போகவில்லை?
- நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தமிழ்நாடு ஆளுநர் முடிவு
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநர் காரும் அவருடைய பாதுகாப்பு வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என டிஜிபி விளக்கமளித்துள்ளார்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. மத்திய மண்டல காவல்துறை ஐஜியின் தலைமையில் ஆளுநரின் பாதுகாப்புக்காக 6 எஸ்.பிக்கள் 6 கூடுதல் எஸ்.பிக்கள் 21 டிஎஸ்பிக்கள், 54 ஆய்வாளர்கள் 102 உதவி ஆய்வாளர்கள் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்யாது என உறுதியோடு கூறுகிறேன்" என தெரிவித்தார்.
வெளிநடப்பு செய்த அதிமுகவினர்
இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்துகொண்டு அங்கிருந்து காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
அச்சமயத்தில் ஆளுநர் கார் மணப்பந்தல் என்ற இடத்தைக் கடந்தபோது, ஆளுநர் கார் மீதும் பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகள் கார் மீதும் கற்கள், கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆளுநருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தும், முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்காமல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னின்று காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்













Click it and Unblock the Notifications