சிக்கிம்: சுயேட்சையாக போட்டியிட்ட முதல்வர் சகோதரர் 708 ஓட்டில் வெற்றி!பாஜக-351; காங்.-28 ஓட்டுகள்!!

Subscribe to Oneindia Tamil

காங்டாங்: சிக்கிமில் ஒரே ஒரு சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்Î முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங்கின் சகோதரர் 708 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் நாம்சிசிங்தாங் மற்றும் ரங்காய் யங்காங் தொகுதிகளில் முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங் வென்றார்.

ரங்யாங் தொகுதி

ரங்யாங் தொகுதி

பின்னர் ரங்யாங்- யங்காங் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை சாம்லிங் ராஜினாமா செய்தார். இதனால் கடந்த 13-ந் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

708 வாக்குகள்

708 வாக்குகள்

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் குமாரி மாங்கரைவிட சுயேட்சை வேட்பாளரும் முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங்கின் சகோதரருமான ரூப் நாரயண் சாம்லிங் 708 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பெற்ற வாக்குகள்

பெற்ற வாக்குகள்

அவர் மொத்தம் 4,788 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் குமாரி 4,080 வாக்குகளைத்தான் பெற்றார்.

பாஜகவுக்கு 351

பாஜகவுக்கு 351

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிகாஷ் பன்செட் மொத்தம் 351 வாக்குகளைப் பெற்றார்.

காங்கிரஸுக்கு 28

காங்கிரஸுக்கு 28

இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அட்கிகாரிக்கு மொத்தம் 28 வாக்குகளே கிடைத்தது.

நோட்டாவுக்கு 46

நோட்டாவுக்கு 46

அதே நேரத்தில் இந்த தொகுதியில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற நோட்டாவுக்கு 46 வாக்குகள் கிடைத்திருக்கிறது. நோட்டாவை விட மிகக் குறைவான வாக்குகளைத்தான் காங்கிரஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+