6 மாதங்களில் வருகிறது பொது சிவில் சட்டம்.. லவ் ஜிகாத்திற்கு எதிராகவும் கடும் சட்டம்.. பாஜக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், 'லவ் ஜிஹாத்', 'லேண்ட் ஜிஹாத்' மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பாக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே பாஜக ஆளும் சில மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், சுவேந்து அதிகாரியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எரியப்பட்டது. சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு அங்கு அமைந்துள்ளது. ஆட்சிக்கு வந்தது முதலே சுவேந்து அதிகாரி பல பரபர அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

West Bengal Suvendu Adhikari Uniform Civil Code in West Bengal

சுவேந்து அதிகாரி

குறிப்பாக மதமாற்ற தடை சட்டம், லவ் ஜிகாத் விவகாரங்களில் அவரது கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கிடையே நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய சுவேந்து அதிகாரி இது தொடர்பாக சில கருத்துகளை கூறியிருக்கிறார். உத்தரகாண்ட் மற்றும் குஜராத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மதமாற்ற தடை சட்டம்

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "உத்தரகாண்ட் மற்றும் குஜராத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். எனக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, 'லவ் ஜிஹாத்', 'லேண்ட் ஜிஹாத்' மற்றும் மதமாற்றம் தொடர்பான விவகாரங்களில் கடுமையான சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் தனியாக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் மேற்கு வங்கத்துக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் இருந்து நான் கோரிக்கையாக முன்வைக்கிறேன். வெளியில் இருந்து வந்து மேற்கு வங்க மக்களின் வேலைவாய்ப்பை பறிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவை உலகளவில் முன்னணி நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல இந்தியாவில் சிறந்த மாநிலமாக மேற்கு வங்கத்தை மாற்றவும் அவர் நிச்சயம் உதவுவார்.

திட்டமிட்டு மோதல்

இதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் (மம்தா அரசை சொல்கிறார்) மேற்கு வங்கத்தில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தினர். மலைப்பகுதிகளில் தமாங், லெப்சா, ராய் உள்ளிட்ட சமூகங்கள் மற்றும் மேலும் 11 சமூகங்களுக்கு இடையே பிரிவினையை திட்டமிட்டு உருவாக்கினர். ராஜ்பன்ஷி சமூகத்திலும் பிளவு ஏற்படுத்தினர். மாதுவா சமூகத்தினர் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. தாகுர்பாரி மற்றும் லோர்மி/குர்மி சமூகங்களுக்கு இடையிலும், ஆதிவாசிகள் மற்றும் குர்மிகளுக்கு இடையிலும் மோதல்கள் உருவாக்கப்பட்டது.

பாஜக அரசு

தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோல மக்களை பிரித்து வைத்தனர். பிளவுகளை திட்டமிட்டு ஏற்படுத்தினர். இப்போது அந்த அரசை தூக்கி எரிந்துள்ளோம். பல ஆண்டுகளுக்கு பிறகு தேசியவாத அரசை மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இந்த அரசு மீது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் வீணாகாது" என்றும் கூறினார். இதனிடையே கொல்கத்தாவில் நவம்பர் 17ம் தேதி ஹனுமன் சாலிசா பாராயண நிகழ்ச்சி நடைபெறும் என்றும் சுவேந்து அதிகாரி அறிவித்தார். தொடர்ந்து டிசம்பர் 29ம் தேதி கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் கீதை பாராயண நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+