காங்கிரஸ் செல்லம்.. என் புஜ்ஜு குட்டி.. என் பப்பிம்மா.. வாடா இங்கே.. செம ஜெயின்.. கலகல ஜெய்ப்பூர்!
குழந்தைக்கு காங்கிரஸ் என பெயரிட்டுள்ளார் தந்தை
ஜெய்ப்பூர்: "காங்கிரஸ் செல்லம்.. வாடா இங்கே.. சாப்பிட்டியா.." என்று இப்படித்தான் தன் மகனை ஆசைதீர கொஞ்சி கொண்டிருக்கிறார் வினோத் ஜெயின்!
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் வினோத் ஜெயின்.. அங்குள்ள முதல்வர் ஆபீசில் ஊடக பிரிவில் வேலை பார்த்து வருகிறார். ரொம்ப தீவிரமான காங்கிரஸ் அபிமானி இவர்!
கடந்த வருடம் ஜூலை மாதம் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு "காங்கிரஸ்" என்றே பெயர் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல.. அவரது குழந்தைக்கான பிறப்பு சான்றிதழையும் மாநில அரசு "காங்கிரஸ் ஜெயின்" என பதிவு செய்து வழங்கியுள்ளது. அந்த பிறப்பு சான்றிதழ் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
முதலில் இந்த பெயரை வைக்க வீட்டில் பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியதாம்.. இப்படி போய் பேர் வெக்கலாமா? எப்படி கூப்பிடறது? என்றெல்லாம் கேட்டுள்ளனர்.. ஆனால் வினோத் இந்த பெயர் தான் வைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தாராம்.. அவர்களை சம்மதிக்கவும் படாதபாடு பட்டுவிட்டாராம்.. இப்போது அனைவரின் ஒப்புதலோடும் மகனுக்கு பெயர் வைத்துள்ளது ஏகப்பட்ட சந்தோஷமாக இருக்கிறது என்கிறார் வினோத்.

தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்தான் நிஜமான காங்கிரஸ் தொண்டன் என்று வினோத்துக்கு பாராட்டுக்கள் குவிகிறதாம்!
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications