நிர்வாணமாக்கி.. மிளகாய் பொடியை "அங்கே" தூவி.. மைனர் குழந்தைகளுக்கு கொடூரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்
டெல்லி: மைனர் குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்காக அவர்கள் கொடூரமாக டார்ச்சர் செய்யப்பட்ட பகீர் சம்பவம் இந்தூரில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்களை வைத்திருக்கிறது. இருப்பினும், அதையும் தாண்டி குழந்தைகளிடம் அத்துமீறல்கள் நடந்தே வருகிறது.

பகீர்: அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் சுமார் 21 குழந்தைகள் அங்கே பணிபுரியும் ஊழியர்களால் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.. இந்தத் தகவலை போலீசார் உறுதி செய்துள்ளனர். குழந்தைகள் நல அமைப்பு கடந்த வாரம் இந்த காப்பகத்தில் ஆய்வு செய்த நிலையில், அப்போது தான் இந்த பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், "சிறிய தவறுகளுக்குக் கூட ஊழியர்கள் அந்த குழந்தைகளைச் சித்திரவதை செய்துள்ளனர். தாங்கள் தலைகீழாகத் தொங்கவிட்டதாகவும் சூடான இரும்பினால் சுடு வைக்கப்பட்டதாகவும் ஆடைகளை களைந்து புகைப்படம் எடுத்ததாகவும் அந்த குழந்தைகள் தெரிவித்தனர்" என்று கூறினர். மேலும், மிளகாயை எரித்து அதன் புகையையும் இழுக்க வைத்துள்ளனர். அந்த குழந்தைகள் கூறிய சம்பவங்கள் நெஞ்சை உலுக்குவதாக இருந்துள்ளது.
"நல்ல ரிவ்யூ தரேன்" பெண் ஹோட்டல் உரிமையாளரை பலாத்காரம் செய்த நபர்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்
வழக்குப்பதிவு: குழந்தைகள் நல அமைப்பினர் தந்த தகவல் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். காப்பகத்தில் இருக்கும் ஐந்து ஊழியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் அந்த எஃப்ஐஆரில், "நான்கு வயது குழந்தை பேண்ட் அணிந்தபடி பாத்ரூம் போய்விட்டான். உடனே அந்த குழந்தையைச் சாப்பாடு கூட தராமல் இரண்டு மூன்று நாட்களுக்கு டாய்லெட்டில் பூட்டிவிட்டனர்" என்றார்.
வாத்சல்யாபுரம் ஜெயின் அறக்கட்டளையால் இந்த காப்பகம் நடந்து வருகிறது. இருப்பினும், அந்த காப்பகம் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். பெங்களூரு, சூரத், ஜோத்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலும் இந்த டிரஸ்டிற்கு சொந்தமான காப்பகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீல்: போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், அந்தக் காப்பகத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கே இருந்த குழந்தைகள் அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டன. கேட்டாலே பதற வைக்கும் இந்த கொடூரமான சம்பவம் குறித்து போலீசர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தைகளின் காயங்களின் படங்களும் போலீஸ் விசாரணையில் இணைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத். ராஜஸ்தான், ஒடிசா, மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் இந்த டிரஸ்ட் காப்பகங்களை நடத்தி வரும் நிலையில், அங்கும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை!












Click it and Unblock the Notifications