"நல்ல ரிவ்யூ தரேன்" பெண் ஹோட்டல் உரிமையாளரை பலாத்காரம் செய்த நபர்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்
லண்டன்: நல்ல ரிவ்யூ போடுவதாக சொல்லி உணவகம் உரிமையாளரை விருந்தினர் ஒருவர் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது அதுவும் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரித்துள்ளது.

பகீர்: அப்படியொரு பகீர் சம்பவம் தான் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பெண் ஒருவர், தனது வீட்டை ஏர்பிஎன்பி மூலம் வாடகைக்கு விட்டுள்ளார். ஏர்பிஎன்பி என்பது நமது வீட்டை அல்லது வீட்டின் ஒரு பகுதியை ஹோட்டலை போல வாடகைக்கு விடும் ஒரு நடைமுறையாகும். அப்படிதான் இந்த பெண் தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
அப்படி வாடகைக்கு வந்த முதல் விருந்தினரே அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. 43 வயதான அந்த நபர் தனக்கு மசாஜ் செய்வதாகக் கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த மே 2021இல் நடந்துள்ளது. ஆனால், இது இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சந்தேகம்: அவர் ஏர்பிஎன்பியில் தனது வீட்டை அப்போது தான் முதல்முறையாக வாடகைக்கு விட்டுள்ளார். அதற்கு முன்பு வரை இதுபோல அவர் செய்ததே இல்லையாம். ஆனால், ஏர்பிஎன்பி மூலம் வாடகைக்கு வந்த முதல் நபர் செய்த காரியம் மறக்க முடியாத கொடூர சம்பவமாக ஆகிவிட்டது. வெறும் 12 மைல் தொலைவில் வசித்த போதிலும், அந்த நபர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அதுவே முதலில் அந்த பெண்ணுக்கு வினோதமாக இருந்துள்ளது.
இருப்பினும், இது முதல்முறை என்பதால் பொதுவாகவே ஏர்பிஎன்பியில் இப்படி தான் எடுப்பார்கள் என அவர் நினைத்துக் கொண்டாராம். அந்த நபர் செக் இன் செய்த நிலையில், கொஞ்ச நேரம் கழித்து இருவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது அந்த பெண் உரிமையாளர் சோபாவில் அமர்ந்தார். அப்போது அருகே வந்த அந்த நபர், மசாஜ் செய்துவிடுகிறேன் என்று முதல் கூறியுள்ளார்.
பாலியல் பலாத்காரம்: அதன் பிறகு திடீரென அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த கொடூரம் முடிந் பிறகு அவர் பயத்தில் நடுங்கியவாறே பெட் ரூமிற்கு சென்று ஒளிந்து கொண்டாராம். பல மணி நேரம் அங்கே கத்தியுடன் பயத்தில் நடுங்கிக் கொண்டே இருந்துள்ளார்.
அந்த நபர் அதிகாலை 2 மணியளவில் மீண்டும் வந்துள்ளார். இருப்பினும், அவர் எந்தவொரு சம்பமும் நடக்காதது போல ரூமிற்கு போய் தூங்கிவிட்டராம். மறுநாள் காலை, கிளம்பும் முன் பெண் உரிமையாளர் அருகே வந்த அந்த நபர், "நான் நல்ல ரிவ்யூ தருகிறேன்.. இதோடு இதை விட்டுவிடு" எனச் சொல்லியுள்ளார்.
புகார்: இந்த சம்பவம் குறித்து ஏர்பிஎன்பி நிர்வாகத்திடம் மட்டும் புகார் அளித்துவிட்டு விட்டுவிடலாம் என்றே அந்த பெண் நினைத்துள்ளார். இருப்பினும், அதன் பிறகு அவர் போலீசாரிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், "அந்த நபர் மீண்டும் ஒரு இடத்திற்குச் சென்று அத்துமீறலாம் அதுபோல நடக்கக் கூடாது என்றால் நான் புகார் அளிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்றார்.












Click it and Unblock the Notifications