For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களை பார்த்து அப்படி சொல்வதா? மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை!

Google Oneindia Tamil News

லடாக்: சீனாவை ஆக்கிரமிக்கும் கொள்கை கொண்ட நாடு என்று கூறுவது தவறு என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீன தூதரகம் பதில் அளித்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்படலாம் என்கிறார்கள்.

இந்தியா - சீனா இடையிலான எல்லை மோதலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சீனா கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத திருப்பம் இன்று இரண்டு நாட்டு பிரச்சனையில் நடந்தது.

அதன்படி இன்று பிரதமர் மோடி அதிரடியாக லடாக் எல்லைக்கே சென்று மக்களுக்கு நம்பிக்கை அளித்தார். திடீர் என்று காலை முன்னறிவிப்பின்றி பிரதமர் மோடி இன்று எல்லைக்குள் சென்று நிலவரத்தை பார்வையிட்டார்.

திடீர் லடாக் விசிட்.. ஸ்கோர் செய்த மோடி.. ஜிங்பிங்கிற்கு எதிராக கொதிக்கும் சீன மக்கள்.. திருப்பம்!திடீர் லடாக் விசிட்.. ஸ்கோர் செய்த மோடி.. ஜிங்பிங்கிற்கு எதிராக கொதிக்கும் சீன மக்கள்.. திருப்பம்!

பார்வை

பார்வை

இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார். எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். முக்கியமாக இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவு வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்களிடம் அதிரடியாக உரையாற்றினார்.

சீனா கருத்து

சீனா கருத்து

பிரதமர் மோடி இதில் பேசிய போது, எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. நமது நிலப்பகுதியை பாதுகாப்பதில் நாம் என்றுமே அஞ்சி பின்வாங்கியது கிடையாது. இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் நாடு. நாங்கள் எங்களையே சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம். உடனே பதிலடி கொடுப்போம்.

அத்துமீறல் தவறு

அத்துமீறல் தவறு

எல்லையில் அத்துமீறுவது எல்லாம் பழைய காலம். அது எல்லாம் இனி நடக்காது. எல்லையில் அத்துமீறும் நிகழ்வுகள் மலையேறி சென்றுவிட்டது. இப்போது வளர்ச்சி குறித்த அரசியல் நடத்த வேண்டியதற்கான காலகட்டத்தில் இருக்கிறோம். வளர்ச்சிதான் நம்முடையக் நோக்கமாக இருக்க வேண்டும். எல்லையையே ஆக்கிரமிப்பது இல்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

சீனா பதில்

சீனா பதில்

இந்த நிலையில் தற்போது சீனாவை ஆக்கிரமிக்கும் கொள்கை கொண்ட நாடு என்று கூறுவது தவறு என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீன தூதரகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவிற்கான சீனாவின் தூதரகம் தெரிவித்துள்ள கருத்தில் , சீனா மொத்தம் 14 நாடுகள் உடன் எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளது. இதில் 12 நாடுகளின் எல்லை பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. எல்லையில் நடக்கும் பிரச்சனைகளை முறையான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து இருக்கிறோம்.

என்ன தீர்வு

என்ன தீர்வு

எந்த விதமான ஆக்கிரமிப்பு செய்யாமல், முறையாக பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்னையை முடிவிற்கு கொண்டு வந்து இருக்கிறோம். இந்தநிலையில் சீனாவை விமர்சனம் செய்வது தவறு. அதிலும் சீனாவின் இப்படி ஆக்கிரமிப்பு செய்வதாகச் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்று சீனா கூறியுள்ளது. சீனாவின் இந்த கருத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்படலாம் என்கிறார்கள்.

English summary
China embassy response to PM Modi speech on his Ladakh visit today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X