என்னங்க... இந்த நெக்லஸ் மட்டும் - தங்கம் வாங்குவதில் உலகிலேயே 2வது இடம் நமக்குத்தான்!
டெல்லி: உலகிலேயே அதிக தங்கம் வாங்குபவர்கள் எண்ணிகையில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது நாடாக விளங்கும் இந்தியாவிலும், சீனாவிலும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 360 டன் அதாவது 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகியுள்ளதாக சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதில் சீன மக்கள் 213.2 டன் தங்க நகைகளையும், அதற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 150.8 டன் தங்க நகைகளையும் இவ்வாண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டும் வாங்கியுள்ளனர்.

உயர்ந்திருக்கும் இந்தியா:
இதற்கு முந்தைய ஆண்டான 2014 இதே காலகட்டத்தில் சீனர்கள் வாங்கியிருந்த தங்கத்தின் அளவை விட இந்த ஆண்டின் விற்பனை சுமார் 10 சதவீதம் சரிந்தும், இந்தியர்களின் இந்த ஆண்டு கொள்முதல் 22 சதவீதம் உயர்ந்தும் உள்ளதாக இந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும், இந்தியாவும்:
சீனர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகமாக வாங்கி குவிப்பதால் தங்கத்தின் சர்வதேச சந்தையின் விலையை நிர்ணயிப்பதில் இந்த இரு நாடுகளின் கொள்முதல் திறன் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியர்கள்தான் ஜாஸ்தி:
இந்தியாவில் மட்டுமின்றி வளைகுடா நாடுகளிலும் தங்க நகைகளை வாங்கி குவிப்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

கிரேட் இந்தியா; கிரிமினல் சீனா:
இந்தியர்களின் தங்கக் கொள்முதல் அவர்களின் மரபுவழி வந்த கலாசார பழக்கமாக இருந்தபோதிலும், சீனர்களின் தங்கக் கொள்முதல் நோக்கமானது, மாறிவரும் தங்கத்தின் விலைகளின் அடிப்படையில், பின்னாளில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் சூதாட்ட மனப்பான்மையை சார்ந்ததாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications