களமிறங்கிய அஜித் தோவல்.. ஒரே வீடியோகால்.. எல்லையில் பின்வாங்கிய சீன படை.. நேற்று நடந்தது என்ன?

சீன படைகள் எல்லையில் பின் வாங்கியதற்கு பின் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

லடாக்: சீன படைகள் எல்லையில் பின் வாங்கியதற்கு பின் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    China-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா? | James Bond Of India

    அதிரடி திருப்பமாக சீனா தற்போது கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு பின்வாங்கி உள்ளது. அங்கு இருக்கும் கட்டுமானங்களை சீனா தொடர்ந்து நீக்க தொடங்கி உள்ளது.

    நிரந்தர கட்டுமான பகுதிகளையும் கூட சீனா நீக்கி இருக்கிறது. கால்வானில் சண்டை நடந்த 14வது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனாவின் படைகள் பின்வாங்கி இருப்பதாக கூறுகிறார்கள்.

    சோதனை செய்து வருகிறது

    சோதனை செய்து வருகிறது

    இதற்கான சோதனையை தற்போது இந்திய படைகள் அங்கே செய்து வருகிறது. எல்லையில் எங்கு எல்லாம் சீனா அத்துமீறியது, எங்கு இருந்து சீனா படைகளை திரும்ப பெற்றது என்று இந்தியா ஆராய்ச்சி செய்து வருகிறது. இதற்கான ரோந்து பணிகள் காலையில் இருந்து நடந்து வருகிறது. கடந்த முறை இப்படி ரோந்து பணியின் போதுதான் சீனா இந்திய வீரர்களை தாக்கியது என்பதால் மிகவும் கவனமாக தற்போது ரோந்து பணிகள் நடந்து வருகிறது.

    காரணம்

    காரணம்

    சீனா கடந்த 60 நாட்களாக எல்லையில் பின்வாங்காமல் முரண்டு பிடித்தது. வரிசையாக பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியை தழுவியது. அமைதியான கல்வான் பகுதியை கூட சீனா உரிமை கொண்டாடியது . சீனாவின் தொடர் செயல் காரணமாக கண்டிப்பாக எல்லையில் அமைதி திரும்பாது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் சீனா திடீர் என்று எல்லையில் பின்வாங்கி உள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    சீனாவின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு பின் எல்லையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் செய்த அதிரடியும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். காஷ்மீர் சிறப்பு அதிகார சட்டத்தை நீக்கியது தொடங்கி பாலக்கோடு சர்ஜிக்கல் தாக்குதல் வரை பல விஷயங்களில் மாஸ்டர் மைண்ட் போல செயல்பட்டவர்தான் அஜித் தோவல். அமித் ஷாவின் லெப்ட் மற்றும் ரைட் ஹேண்ட் எல்லாமே இவர்தான்.

    தொடர் அமைதி

    தொடர் அமைதி

    சீனா கடந்த மே 5ம் தேதி எல்லையில் அத்துமீறிய போது அஜித் தோவல் அமித் ஷாவுடன் ஆலோசனை செய்தார். ஆனால் அதன்பின் அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது.அவர் மீட்டிங்கில் கலந்து கொண்டதாக கூட செய்திகள் வெளியாகவில்லை. ஜூன் 15 -16 தாக்குதலுக்கு பின் நடந்த மீட்டிங்கில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் அமைதியாக பின்னணியில் வேலை பார்த்து வந்தார் என்று கூறுகிறார்கள்.

    சீக்ரெட்

    சீக்ரெட்

    அதாவது சீனாவின் ராணுவ அதிகாரிகள் உடன் இவர் அமைதியாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்தியா சீனாவுடன் மொத்தம் 22 மீட்டிங்கை நடத்தியது. இதற்கான திட்டங்களை வகுத்தது, மீட்டிங்கில் என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியது எல்லாம் அஜித் தோவல்தான் என்று கூறுகிறார்கள். வெளியே தலை காட்டாமல் ராணுவத்துடன் நெருக்கமாக இருந்து இவர் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

    களமிறங்கினார்

    களமிறங்கினார்

    ஆனால் 22 மீட்டிங்கில் 21 மீட்டிங் மொத்தமாக தோல்வியை தழுவியது. கடந்த 30ம் தேதி இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் மற்றும் சீன ராணுவத்தின் மேஜர் ஜெனரல் இடையே நடந்த மீட்டிங்தான் கொஞ்சம் வெற்றி பெற்றது. இந்த மீட்டிங்கிற்கு பின் அஜித் தோவல் சுயமாக களமிறங்கி நேரடியாக பேச்சுவார்த்தை செய்துள்ளார். நேரடியாக களமிறங்கி பேச்சுவார்த்தை செய்தால்தான் சண்டை சரியாகும் என்று அஜித் தோவல் களமிறங்கி உள்ளார்.

    பேசினார்

    பேசினார்

    ஆம் நேரடியாக இவர் சீனாவிடம் பேசி உள்ளார். சீனா தொடர்ச்சியாக இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு குறைந்த ரேங்க் அதிகாரிகளை மட்டுமே அனுப்பியது. ஆனால் அஜித் தோவல் நேரடியாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் உடன் பேசினார். அமைச்சர் வாங் யி உடன் அவர் நேரடியாக பேசினார். அவரின் இந்த பேச்சுவார்த்தைதான் எல்லையில் நிலைமையை மாற்றியது என்கிறார்கள்.

    வீடியோ கால்

    வீடியோ கால்

    நேற்று இரவு அஜித் தோவல் இந்த வீடியோ காலை செய்து இருக்கிறார். சுமார் 45 நிமிடம் இவர்கள் பேசி இருக்கிறார்கள் . எல்லையில் இரண்டு நாடுகளும் படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அஜித் தோவல் கூறியுள்ளார். அஜித் தோவல் பேசிய விதமும், வைத்த கோரிக்கையும் சீனாவை அடிபணிய வைத்து இருக்கிறது. இதனால் எல்லையில் திடீரென சீனா படைகளை வாபஸ் வாங்க காரணம் என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+