பொய்யான தகவல்.. எங்கள் வீரர்கள் 40 பேரெல்லாம் சாகவில்லை.. சீனா பரபரப்பு மறுப்பு.. மௌனம் கலைத்தது!
லடாக் எல்லையில் நடந்த சண்டையில் 40 சீன வீரர்கள் பலியானதாக வெளியாகும் செய்தி பொய் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்: லடாக் எல்லையில் நடந்த சண்டையில் 40 சீன வீரர்கள் பலியானதாக வெளியாகும் செய்தி பொய் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
கடந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன் கிழமை கல்வான் பகுதியில் பெரிய மோதல் ஏற்பட்டது.இந்த லடாக் மோதலில் மொத்தம் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் மொத்தம் 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் மட்டுமே வருகிறது.
இதனால் இந்தியா - சீனா இடையே எல்லையில் தீவிரமான மோதல் ஏற்பட்டு வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது.

சொல்லவில்லை
கல்வான் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்ற விவரமா வெளியாகவில்லை. இது தொடர்பாக சீனா எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொடர்ந்து சீன அரசு இது தொடர்பான விவரங்களை வெளியிடாமல் மக்கள் இருட்டுக்குள் வைத்து இருக்கிறது. இந்த சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்பது இன்னும் புதிராக உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

கருத்து
இந்த நிலையில் இந்திய தரப்பில் இது தொடர்பாக ஊடகங்களில் நிறைய செய்திகள் வந்தது. அதன்படி சீன வீரர்கள் 43 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவை விட சீனாவின் பக்கம் சேதங்கள் அதிகம் என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால் இதில் சீனா கருத்து தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்தது. இந்த நிலையில் சீனா முதல்முறையாக மௌனம் கலைத்து உள்ளது.

சொன்னது என்ன
இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் பேட்டி அளித்துள்ளார். அதில், கல்வான் சண்டை தொடர்பாக இந்தியாவில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. சீன வீரர்கள் 40 பேர் பலியாகிவிட்டதாக பொய்யான செய்தி வருகிறது. இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. 40 சீன வீரர்கள் பலியானதாக வெளியாகும் செய்திகளை சீனா அதிரடியாக மறுக்கிறது.

பேச்சுவார்த்தை முக்கியம்
இது தொடர்பாக மேலும் என்னால் கருத்து தெரிவிக்க முடியாதது. இரண்டு நாட்டு சண்டையை தாக்குதல் மூலம் சரி செய்ய முடியாது. வெளிப்படையான,ஆழமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் எல்லையில் அமைதி திரும்பும். இரண்டு நாடுகளும் இது தொடர்பாக வரிசையாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.

சர்வதேச ஒப்பந்தம்
இந்தியா எல்லை பிரச்னையை சரியாக எதிர்கொள்ள வேண்டும். நாங்கள் எல்லையில் அமைதியை கொண்டு வர தயாராக இருக்கிறோம். சர்வதேச விதிகளை சீனா எப்பபோதும் மதிக்கிறது. உலக அமைதியே சீனாவின் நோக்கம். அதேபோல் இந்தியாவின் அமைதியை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியாவும் சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும் என்று, சீனாவின் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் பேட்டி அளித்துள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications