அடம் பிடிக்கும் சீனா.. அந்த பிரச்சனை மட்டும் தீரவே இல்லை.. இன்று மீண்டும் நடக்கும் ராணுவ மீட்டிங்!
சீனா மற்றும் இந்தியா இடையிலான லடாக் எல்லை பிரச்சனையை தீர்க்கும் வகையில் இன்று முக்கியமான ராணுவ அளவிலான மீட்டிங் நடக்க உள்ளது.
லடாக்: சீனா மற்றும் இந்தியா இடையிலான லடாக் எல்லை பிரச்சனையை தீர்க்கும் வகையில் இன்று முக்கியமான ராணுவ அளவிலான மீட்டிங் நடக்க உள்ளது.
இந்தியா - சீனா இடையிலான லடாக் எல்லை பிரச்சனை மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இரண்டு நாட்டு எல்லை பிரச்சனை முடியுமா, முடியாதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். அங்கு தீவிரமான மாற்றங்கள் நடந்து வருகிறது.
லடாக் எல்லையில் கல்வான் பகுதி, பாங்காங் திசோ பகுதி மற்றும் மற்ற சில கிழக்கு லடாக் பகுதிகளில்தான் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு இன்னும் இரண்டு நாட்டு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளது.

என்ன பேச்சுவார்த்தை
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக கடந்த வாரம் தான் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இதில் எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது.

என்ன முடிவு
ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த மீட்டிங் பார்க்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக கால்வான் பகுதியில் இரண்டு நாட்டு படைகளும் பின்வாங்கியது. அங்கு இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த இரண்டு நாட்டு படைகள் பின்வாங்கி இருக்கிறது. இரண்டு நாட்டு சண்டையில் இது மிகவும் ஆக்கபூர்வமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் என்ன
ஆனால் இன்னுமும் லடாக்கில் பாங்காங் திசோ பகுதியில் படைகள் குவிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இரண்டு நாட்டு படைகள் 10-12 ஆயிரம் பேர் வரை குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாங்காங் திசோ பகுதியில் மொத்தம் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகள் பிங்கர்கள் என்று அழைக்கப்படும். இதில் முதல் 4 பிங்கர் பகுதிகளை இந்தியா கட்டுப்படுத்துகிறது. கடைசி 4 பிங்கர் பகுதிகளை சீனா கட்டுப்படுத்துகிறது.

மொத்த சண்டை
இதை மொத்தமாக யார் கட்டுப்படுத்துவது என்பதுதான் கேள்வியாக உள்ளது. இதனால்தான் பாங்காங் திசோ பகுதியில் சண்டை நடந்து வருகிறது. அங்கு இன்னும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இந்த நிலையில் இந்த பாங்காங் திசோ பிரச்சனை குறித்து இன்று ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். இரண்டு நாட்டை சேர்ந்த மேஜர் ஜெனரல் இடையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

மீட்டிங்
இந்தியாவின் சார்பாக மேஜர் ஜெனரல் மற்றும் மேஜர் இருவரும் இன்று எல்லையில் சீனாவின் ராணுவ அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பாங்காங் திசோ பிரச்சனை குறித்து இவர்கள் பேச இருக்கிறார்கள். இன்று மதியம் மீட்டிங் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மீட்டிங் நடக்கவில்லை என்றால், நாளை மீட்டிங் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications