2 நாள்தான்.. மோடியின் "அசால்ட்" மெசேஜ்.. லடாக் விசிட்டை அடுத்து பின்வாங்கிய சீனா.. அதிரடி திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக் எல்லையில் சீனா திடீரென படைகளை வாபஸ் வாங்கியதற்கும் பிரதமர் மோடியின் லடாக் விசிட்டிற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

Recommended Video

    திடீரென பின்வாங்கிய China... எல்லையில் என்ன நடந்தது?

    லடாக் எல்லையில் சீனா திடீரென்று படைகளை திரும்ப பெற்று உள்ளது. தொடர்ந்து படைகளை குவித்து வந்த சீனா தற்போது எல்லையில் படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக இந்த மாற்றம் நிகழ்ந்து உள்ளது.

    கால்வானில் சண்டை நடந்த இடத்தில் இருந்துதான் படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. கால்வானின் கட்டுப்பாட்டு பகுதி 14ல் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.

    சீனா இறங்கி வந்தது

    சீனா இறங்கி வந்தது

    மொத்தம் 60 நாட்களாக இந்த சண்டை இருந்தது. கடந்த மே 5ம் தேதி தொடங்கிய இந்த சண்டை தற்போது ஜூலை 5ம் தேதியில் கொஞ்சம் முடிவை நோக்கி திரும்பி உள்ளது. சீனா தனது ஷோல்டரை இறக்கி, பின்வாங்க சம்மதம் தெரிவித்துள்ளது. எல்லையில் இப்படி சீனா திடீர் என்று பின்வாங்க நிறைய காரணங்கள் இருக்கிறது. நான்கு முக்கியமான விஷயங்கள் சீனாவின் இந்த முடிவிற்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.

    காரணம் 1

    காரணம் 1

    காரணம் 1ன் படி இந்தியா சீனா இடையே எல்லையில் நடந்த பேச்சுவார்த்தைதான் என்று கூறுகிறார்கள். அதாவது தொடர்ச்சியாக 21 ராணுவ மீட்டிங் நடந்தது. அதை தொடர்ந்து கடந்த 30ம் தேதி இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் மற்றும் சீன ராணுவத்தின் மேஜர் ஜெனரல் இடையே நடந்த மீட்டிங்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். இதில் இந்தியாவின் அழுத்தத்தை சீனா ஏற்றுக்கொண்டது, எல்லையில் பின்வாங்க சம்மதம் தெரிவித்தது கூறுகிறார்கள்.

    அடுத்த காரணம்

    அடுத்த காரணம்

    இதற்கு அடுத்த காரணம் கல்வான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளமும் சீனா படைகளை வாபஸ் வாங்க காரணம் என்று கூறுகிறார்கள். கல்வான் பகுதியில் சீனா படைகள் எங்கு இருந்ததோ அங்கு ஐஸ் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளம் காரணமாக அங்கு சீனாதனது படைகளை வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அங்கு சீனா மொத்தமாக பின் வாங்கி உள்ளது. இதுவும் கூட சீனா படைகளை பின்வாங்க காரணம் என்கிறார்கள்.

    மோடி முக்கியம்

    மோடி முக்கியம்

    அடுத்த காரணம்தான் மிக முக்கியம். சீனா எல்லையில் நேற்று இரவு படைகளை வாபஸ் வாங்கியது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடி லடாக் சென்று வெறும் இரண்டு நாட்களில் எல்லையில் சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. எல்லையில் நேரடியாக லே பகுதியில் பிரதமர் மோடி ஆய்வுகளை செய்தார். இந்திய வீரர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி வீர உரை ஆற்றினார்.

    என்ன செய்தார்

    என்ன செய்தார்

    இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இரண்டு நாள் முன் அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார்.எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். முக்கியமாக இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவு வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்களிடம் அதிரடியாக உரையாற்றினார்.

    மோடியின் பேச்சு

    மோடியின் பேச்சு

    பிரதமர் மோடி இதில் பேசிய போது சீனாவினை அமைதியாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். எதிரிகள் நம்மை வீழ்த்த திட்டமிட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. நமது நிலப்பகுதியை பாதுகாப்பதில் நாம் என்றுமே அஞ்சி பின்வாங்கியது கிடையாது. இந்திய வீரர்கள் எல்லையில் தைரியமாக பாதுகாப்பு பணிகளை செய்கிறார்கள்.

    உடனே பதிலடி

    உடனே பதிலடி

    நாமாக யாரிடமும் சண்டைக்கு செல்ல மாட்டோம். ஆனால் தேவையில்லாமால் சீண்டினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் நாடு. நாங்கள் எங்களையே சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம். உடனே பதிலடி கொடுப்போம். எல்லையில் அத்துமீறுவது எல்லாம் பழைய காலம். அது எல்லாம் இனி நடக்காது. எல்லையில் அத்துமீறும் நிகழ்வுகள் மலையேறி சென்றுவிட்டது. எல்லையை ஆக்கிரமிக்கும் கதைகள் இனி நடக்காது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

    கடும் எச்சரிக்கை

    கடும் எச்சரிக்கை

    சீனாவின் பெயரை குறிப்பிடாமல் சீனாவை கடுமையாக எச்சரித்தார். இது சீனாவிற்கு அதிர்ச்சி அளித்தது. மோடி எல்லைக்கு சென்று இப்படி பேசுவார். எச்சரிக்கை விடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மோடியின் இந்த அதிரடியை தொடர்ந்து இந்தியாவின் நிலைப்பாடு உலகம் முழுமைக்கும் தெரிந்தது. மோடியின் பேச்சு ஹிட் அடித்த காரணத்தால், உலக நாடுகள் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தியது.

    கடைசி காரணம்

    கடைசி காரணம்

    மோடியின் பேச்சை தொடர்ந்து சீனாவிற்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஏசியன் நாடுகள் எல்லாம் கொதித்து எழுந்தது. இது எல்லாம் சேர்த்து சீனாவிற்கு பெரிய அழுத்தமாக மாறியது. மோடியின் பேச்சு காரணமாக இந்தியாவில் படைகள் உற்சாகம் அடைந்தது . என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    ஆனால் இன்னொரு பக்கம் சீனாவிற்கு அந்த நாட்டிலேயே எதிர்ப்பு எழுந்தது. அதிபர் ஜிங்பிங் பிரதமர் மோடி போல மக்களுடன் மக்களாக நிற்கவில்லை. எல்லைக்கு செல்லவில்லை. வீரர்களை சந்திக்கவில்லை. சம்பிரதாயத்திற்கு போட்டோ கூட எடுக்கவில்லை. இதனால் அந்த நாட்டு மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த பிரச்சனை எல்லாம் சேர்ந்து, மொத்தமாக தற்போது எல்லையில் சீனா பின் வாங்க காரணமாக மாறியுள்ளது .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+