சீனா எதிர்பார்க்காத சிக்கல்.. கல்வானில் பெருக்கெடுக்கும் ஐஸ் வெள்ளம்.. வசமாக சிக்கிய ராணுவ வீரர்கள்!
லடாக்: கால்வானில் தற்போது பெருக்கெடுத்து வரும் ஐஸ் வெள்ளம் காரணமாக அங்கே பெரிய அளவில் சீனா வீரர்கள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதிக்கு கடந்த இரண்டு மாதமாக சீனா தொடர்ந்து குறி வைத்து வருகிறது. அங்கு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 14ல்தான் கடந்த மாதம் பெரிய அளவில் இரண்டு நாட்டு வீரர்கள் இடையே சண்டை நடந்தது.
இந்த சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால் கல்வான் பகுதியில் இருந்து இன்னும் சீனா தனது படைகளை வாபஸ் வாங்காமல் இருக்கிறது.

படைகள் வாபஸ்
அதிலும் கல்வானில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில 14, 15, 17, 18 ஆகிய நான்கு இடங்களில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இந்திய எல்லைக்குள் 500 மீட்டரை கடந்து வந்து சீனா முகாம்களை அமைத்து உள்ளது. பெரிய அளவில் சீனா அங்கு கட்டுமானங்களை செய்து வருகிறது. அதேபோல் அங்கே அதிக அளவில் சீனா தனது ராணுவ வீரர்களையும் களமிறக்கி வருகிறது.

என்ன சிக்கல்
தற்போது இங்கே படைகளை குவித்து வரும் சீனாவிற்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அங்கிருக்கும் கல்வான் நதி பகுதியில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் அங்கே தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இங்கே வரும் தண்ணீர் அதிக ஐஸ் நிரம்பிய வெள்ளம் ஆகும். இந்த நதி செல்லும் பாதையில்தான் தற்போது சீனா படைகளை குவித்து உள்ளது. இங்குதான் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மோசமானது
இந்த வெள்ளம் தற்போது அக்சாய் சின் பகுதியில் இருந்து வருகிறது. கல்வான் என்பது நதி ஓடும் பகுதியாகும். இந்த நதி அக்சய் சின் பகுதியில் உருவாகி அங்கிருந்து அப்படியே கல்வான் சென்றுபின் ஹாட்ஸ்பிரிங் பகுதிக்கு சென்று, பின் பாங்காங் திசோ செல்லும். இங்குதான் சீனா ஆக்கிமிப்புகளை செய்து இருக்கிறது. இதில் கல்வானில்
தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதம்
இந்த நதியின் அருகே சீனா இரண்டு மாதங்களாக கட்டுமான பணிகளை செய்து வந்தது. சாதாரண டென்ட்கள் மட்டும் கட்டவில்லை. திட்டமிட்டு சீனா அங்கே கட்டுமானங்களை செய்து வந்தது. இதில் பல கட்டுமான பகுதிகள் நிரந்தரமான கட்டுமானங்கள் ஆகும். இந்த கட்டுமானங்கள் மீது தற்போது வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சிக்கியது
இதனால் அந்த குறிப்பிட்ட இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் இன்றி சீனா செய்த ஆக்கிரமிப்பு அந்த நாட்டு ராணுவத்திற்கே சிக்கலாக மாறியுள்ளது. அங்கு இருந்து வெளியேற வேறு இடங்களில் முகாம் அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சீனா தள்ளப்பட்டு உள்ளது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications