காஷ்மீர் ஜி20 கூட்டம்.. பாக். காட்டிய எதிர்ப்பு! சீனாவுடன் இணைந்து வேறு சில நாடுகளும் புறக்கணிப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஜி20 நாடுகளின் கூட்டம் நடைபெறும் நிலையில், இந்தக் கூட்டத்தைச் சீனாவுடன் இணைந்து மேலும் சில நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கியது தான் ஜி20 மாநாடு.. சர்வதேச அளவில் நடக்கும் வர்த்தகத்தில் சுமார் 85% இந்த நாடுகளின் மூலமே நடக்கிறது.
இதனால் ஜி20 மாநாடுகளில் எடுக்கப்படும் முடிவுகள் சர்வதேச அளவில் முக்கியமானதாகவே பார்க்கப்படும்.. இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் வழங்கப்படும்.

ஜி20: கடந்தாண்டு இந்தோனேசியாவுக்குத் தலைமை பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்தியாவுக்குத் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டின் இறுதியில் நடக்கும். அதற்கு முன்பாக ஆண்டு முழுக்க பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடுகளும் தொடர்ச்சியாக நடைபெற்றும். அதன்படி சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்து வருகிறது.
அதன்படி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்றும் நடக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் நடக்கும் முதல் சர்வதேச கூட்டம் என்பதால் இதற்காகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் ஜி20 கூட்டம் நடத்தப்படும் போதிலும், இதற்குப் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சீனா உள்ளிட்ட சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
கூட்டாக அறிக்கை: இது குறித்து சீனா, பாகிஸ்தான் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்று தெளிவாக உள்ள போதிலும், அதைச் சர்ச்சைக்குரிய பிரதேசம் எனக் குறிப்பிட்ட சீனா, அங்கே இதுபோன்ற சந்திப்புகளை நடத்துவதைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியிருந்தது. இதனால் சீனா இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தது.
சீனாவைத் தொடர்ந்து துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளும் காஷ்மீர் ஜி20 கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. 17 நாடுகளைச் சேர்ந்த 120 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீநகருக்கு வந்தனர்.. துருக்கி மற்றும் சவுதி நாடுகளில் இருந்து தனிப்பட்ட முறையில் சில பிரதிநிதிகள் இதில் பங்கேற்றாலும் சீனாவில் இருந்து யாரும் இல்லை.

இந்தியா பதிலடி: காஷ்மீரைச் சர்ச்சைக்குரிய பிரதேசம் என்று சீனா குறிப்பிட்டிருந்த நிலையில், இதற்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்திருந்தது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பிரதேசம் என்பதால் இங்கே கூட்டத்தை நடத்துவதில்லை எந்தவொரு தவறும் இல்லை என்று இந்தியா கூறியிருந்தது.
காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்துவது பொறுப்பற்ற நடவடிக்கை என்று பாகிஸ்தான் கூறிய நிலையில், அதையும் நிராகரித்த இந்தியா, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், ஸ்ரீநகரில் நிகழ்ச்சியைத் திட்டமிடுவது அதன் உரிமைக்கு உட்பட்டது என்றும் கூறியது
காஷ்மீரில் 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடக்கும் முக்கிய சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications