இந்தியாவில் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி
டெல்லி: இந்தியாவில் சீன நாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீன துணை அதிபர் லீ யுவான்சாவ் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகை, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் இல்லம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, சீன துணை அதிபர் லி யுவான்சோ நேற்று சந்தித்து பேசினார். அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வந்துள்ளதையும், தான் சீனாவிற்கு சென்ற அனுபத்தையும் லி யுவான்சோவிடம் மோடி பகிர்ந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் சீன நாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும் இந்தியாவிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சீனா இடையில் அமைதி, கூட்டுறவு, நிலைத்தன்மை ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications