59வது பிறந்தநாள்: வயதானாலும் சிரஞ்சீவி 'ராக்ஸ்டார்' தான்
ஹைதராபாத்: நடிகரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சிரஞ்சீவி இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தெலுங்கு திரை உலகை ஒரு காலத்தில் தனது நடிப்பால் ஆட்சி செய்தவர் சிரஞ்சீவி. அரசியலுக்கு வந்து தற்போது எம்.பி.யான பிறகு அவர் படங்களில் நடிக்காமல் உள்ளார். ஆனால் அவரை மீண்டும் நடிக்க வைக்காமல் அவரது ரசிகர்கள் ஓயமாட்டார்கள் போன்று.
அப்படி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள சிரஞ்சீவி இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நாளில் சிரஞ்சீவியின் சினிமா பயணம் பற்றி பார்ப்போம்.

சிரு
1955ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி சிவசங்கர வர பிரசாத் கொனிடலாவாக பிறந்தவர் சிரஞ்சீவி. சென்னையில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தான் நடிப்பை கற்றுக் கொண்டார்.

முதல்படம்
ராஜ்குமார் இயக்கத்தில் 1979ம் ஆண்டில் வெளியான புனதிரல்லு தான் சிரஞ்சீவி நடித்த முதல் படம்.

ராமைய்யா
1982ம் ஆண்டு வெளியான இன்ட்லோ ராமைய்யா வீதிலோ கிருஷ்ணய்யா படம் தான் சிரஞ்சீவிக்கு கிடைத்த முதல் ஹிட்.

வெற்றிகள்
தெலுங்கு திரை உலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்தார் சிரஞ்சீவி. அவரை ஆந்திரா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

டான்ஸ்
சிரஞ்சீவி நடிப்பதோடு மட்டும் அல்லாமல் சூப்பராக டான்ஸும் ஆடுவார். அவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் பல தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன.

ஆடை
தெலுங்கு நடிகர்கள் பச்சை கலர் பேண்ட், மஞ்சள் கலர் சட்டை என்று கலர், கலராக ஆடை அணிந்து வருவார்கள். அதற்கு சிருவும் விதிவிலக்கு அல்ல.

அரசியல்
ரசிகர்கள் பட்டாளம் உள்ள சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை துவங்கினார். பின்னர் அந்த கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட்டார்.

பிறந்தநாள்
சிரஞ்சீவியின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார். ஹைதராபாத்தில் நடந்த கொண்டாட்டத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா கலந்து கொண்டார்.

இணையதளம்
பிறந்தநாளையொட்டி சிரஞ்சீவியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications