For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரு க்ளிக் ஆர்ட் மியூசியத்தில் படமெடுத்து மகிழ்ந்த க்றிஸ் கெய்ல்... !

By Shankar
Google Oneindia Tamil News

இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், 'க்ளிக் ஆர்ட் மியூசியத்தை' சென்னையில் உள்ள வி.ஜி.பி.யில் முதலில் தொடங்கினார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த க்ளிக் ஆர்ட் மியூசியம், சென்னையை தொடர்ந்து கலிபோர்னியாவிலும் திறக்கப்பட்டது. அங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னை, கலிபோர்னியாவைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் 'க்ளிக் ஆர்ட்' மியூசியம் தொடங்கப்பட்டுள்ளது.

Chris Gail launches Click Art Museum in Bangaloru

பெங்களூரு மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் பெங்களூரு நகரத்தின் வொய்ட் ஃபீல்ட், வெர்ஜினியா மால்ஸில் ஏ.பி.ஸ்ரீதரின் 'க்ளிக் ஆர்ட்' மியூசியம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

Chris Gail launches Click Art Museum in Bangaloru

பெங்களூரு 'க்ளிக் ஆர்ட்' மியூசியத்தை பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். பெங்களூர் அணி வீரருமான கிறிஸ் கெய்ல் வண்ணம் தீட்டி துவக்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், 'க்ளிக் ஆர்ட்' மியூசியத்தில் உள்ள ஓவியங்களுடன் மிகவும் சந்தோஷமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Chris Gail launches Click Art Museum in Bangaloru

க்ளிக் ஆர்ட் மியூசியம் அனுபவம் பற்றி, கிறிஸ் கெயில் பேசுகையில், ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. சிறகுகள் ஓவியத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்தபோது, நான் ஒரு ஏஞ்சல் போலவே என்னை உணர்ந்தேன், என்று சிலாகித்தார்.

Chris Gail launches Click Art Museum in Bangaloru

இங்கே இருக்கிற 27 ஓவியங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தேடுக்கப்பட்டு புதிதாக வரையப்பட்ட ஓவியங்களாகும். அதனால் உறுதியாக ரசிகர்களை மகிழ்விப்பதோடு, ஒரு புதிய அனுபவத்தையும் நிச்சயம் தரும் என்கிறார், ஓவியர் ஏ.வி.ஸ்ரீதர்.

English summary
West Indies cricketer Chris Gail was launched AP Sridhar's Click Art Museum in Bangaloru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X