சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சூர்: கேரள மாநிலத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், பிரிச்சி என்னும் இடத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக வேலை பார்த்து வந்தவர் ஜேம்ஸ். இவர் 12 வயது சிறுமிகள் இருவருக்கு கடந்த 2014 ம் ஆண்டு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்சூர் செசன்ஸ் நீதிமன்றம், பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அம்மாநில அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications