ஹரியானாவில் "தேவாலயம்" சூறையாடல்: சிலுவைக்கு பதில் ஹனுமான் சிலையை வைத்த கும்பல்!!
சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தை ஒரு கும்பல் சேதப்படுத்தியுள்ளது. மேலும் தேவாலயத்தில் இருந்த சிலுவையை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஹனுமானின் சிலையை வைத்துள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கைம்ரி கிராமத்தில் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தேவாலயத்திற்குள் ஒரு கும்பல் புகுந்து அதை சேதப்படுத்தியுள்ளது. தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலுவையை உடைத்துவிட்டு அந்த இடத்தில் ஹனுமானின் சிலையை அந்த கும்பல் வைத்துள்ளது.

மேலும் அந்த கும்பல் தேவாலயத்தில் ராமர் கொடியை பறக்கவிட்டதுடன் அங்கிருந்த பாதிரியார் வில்லிவார்ஷை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிரியார் போலீசில் புகார் அளித்தார்.
அந்த கும்பல் தேவாலயத்தை சேதப்படுத்தி, ஹனுமான் சிலையை வைத்துவிட்டு, அங்கிருந்த சில பொருட்களை திருடிச் சென்றதாக பாதிரியார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஹரியானா மாநில கிறிஸ்தவ முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு அந்த அமைப்பு போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications