பட்ஜெட் ஓகே.. எது விலை குறையும்.. எது கூடப் போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்?
மத்திய பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரி விதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பல பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி: பொது பட்ஜெட் வரி விதிப்பு மாற்றத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகரெட், புகையிலை உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயரும் என தெரிகிறது. அதேபோல் பல பொருட்களின் விலை குறையும் என்றும் கூறப்படுகிறது.
பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் முதன்முறையாக ஒருங்கிணைத்து இன்று நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.

வரிவிதிப்பு மாற்றத்துடன் பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. இதானல் விலை உயரும் மற்றும் குறையும் பொருட்கள் எவை எவை என்பதைப் பார்ப்போம்...
உடலுக்கு கேடு விளைவிப்பவையான சிகரெட்டு, பான்மசாலா, புகையிலை போன்றவற்றின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும். அதேசமயம், சோலார் மின்தகடுகள், எரிபொருள் கலன்கொண்ட மின் உற்பத்தி அமைப்புகள், காற்றின்மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டர் ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயரும் பொருட்கள்
சிகரெட்டுகள், பான் மசாலா, சிகார், சுருட்டுகள், பீடிகள், மெல்லும் புகையிலை, எல்.இ.டி. விளக்கு உதிரிபாகங்கள், வறுத்த மற்றும் உப்புபோடப்பட்ட முந்திரி, கண்ணாடி இழைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலிமர் பூசிய எம்.எஸ்.டேப்கள், அலுமினியம் தாதுக்கள், வெள்ளி நாணயங்கள்-பதக்கங்கள், செல்போன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும என கூறப்படுகிறது.
விலை குறையும் பொருட்கள்:
திரவ இயற்கை எரிவாயு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் சுத்திகரிப்பான் வடிகட்டி, சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், எரிபொருள் செல் சார்ந்த மின் உற்பத்தி அமைப்புகள், காற்று மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டர், பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் கைரேகை பதிவு எந்திரம், ராணுவத்தினருக்கான குழு காப்பீடு ஆகியவை வெகுவாக குறையும் என தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications