Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜஸ்தான் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே போட்டி.. பயங்கர மோதல்! போலீஸ் குவிப்பு! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரபல அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரபலமான அரண்மனை உள்ளது. அரச குடும்பத்தை சேர்ந்த வம்சாவளியினர் இந்த அரண்மனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த அரச குடும்பத்தின் 77-வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏவும் அரச குடும்பத்தை சேர்ந்தவருமான விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார்.

Rajasthan Udaipur Palace Violence

இவருக்கும் இவரது ஒன்று விட்ட சகோதரர் மருத்துவர் லக்‌ஷய் ராஜ் சிங் மேவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. புதிதாக மகாராஜாவாக பொறுப்பேற்றுக்கொண்ட பாஜக எம்.எல்.ஏ விஷவராஜ் சிங், உதய்பூர் அரண்மைனைக்கு செல்ல முயன்றார். ஆனால், அரண்மனை அறக்கட்டளையை நிர்வகித்து வரும் விஷ்வராஜ் சிங்கின் சித்தப்பாவும், ஒன்றுவிட்ட சகோதரர் லக்‌ஷ்ய ராஜ்ஜும், விஷ்வராஜ் சிங் செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

இதனால், கோபம் அடைந்த விஷ்வராஜ் சிங் ஆதரவாளர்கள் அரண்மணை கேட்டில் நின்று கற்களை வீசித் தாக்கினர். பதிலுக்கு அரண்மைனைக்குள் உள்ளே இருந்தவர்கள் திருப்பி கற்களை வீசினர். இதனால், அரண்மனை வாசல் பகுதியில் போர்க்களம் போல காட்சி அளித்தது. இரவு 10 மணிக்கு மேல் இந்த மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். அரண்மனை கேட் முன்பாக விஷ்வராஜ் சிங் தனது ஆதரவாளர்களுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தில் இனி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வை எட்டும் என்று சொல்லப்படுகிறது.

Rajasthan Udaipur Palace Violence

பாஜக சார்பாக ராஜஸ்மந்த் தொகுதியில் போட்டியிட்டு விஷ்வராஜ் சிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவரது மனைவி மஹிமா குமாரி சிட்டிங் எம்பியாக உள்ளார். விஷ்வராஜ் சிங் தந்தை மகேந்திர சிங் மேவார் காலமானதையடுத்து, அரண்மனையின் புதிய வாரிசாக விஷ்வராஜ் சிங் அறிவிக்கப்பட்டார். பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா நடைபெற்றது. மேவார் வம்சத்தினர் முகலாயர்களை எதிர்த்து போரிட்டதாக சொல்லப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக புதிய வாரிசு முடிசூட்டு விழா நடைபெறும் நிலையில், அரண்மனையில் உள்ள தெய்வங்களை வழிபட விஷ்வராஜ் சிங் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு அனுமதி மறுக்கவே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரண்மனையை நிர்வகிப்பவர்களுக்கும் விஷவ்ராஜ் சிங்கிற்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேவார் அரச குடும்பத்தின் கோவில்கள், கோட்டைகளை 9 அறக்கட்டளை மூலம் நிர்வகித்து வரப்படுகிறது. இந்த அறக்கட்டளைகள அனைத்தும் விஷ்வராஜ்ஜின் சித்தப்பா மற்றும் அவரது மகனால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 1984 ஆம் ஆண்டு அப்போதைய மேவார் மகாராஜா தனது இளையமகன் அரவிந்தர் சிங்கிற்கு அறக்கட்டளை பொறுப்புகளை ஒப்படைத்து மூத்த மகன் மகேந்திர சிங்கிற்கு அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலக்கி வைத்தார். அப்போது முதலே இந்த மோதல் வெடித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+