ஆறாம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து பலாத்காரம் செய்த சக மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆறாம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது லொகர்தாகா என்ற சிறு நகரம். இங்குள்ள அரசுப் பள்ளியொன்றில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.

கடந்த திங்கள்கிழமை மாலை பள்ளி வகுப்பு நேரம் முடிந்த பிறகு அதே பள்ளியில் படிக்கும் தனது ஆண் நண்பர்கள் நான்குபேருடன் பள்ளி வளாகத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்த இந்த சிறுமியை திடீரென அந்த நால்வரும் தூக்கிச் சென்று வகுப்பறையென்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

வீடு திரும்பிய சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரித்தபோது தனது பெற்றோரிடம் நடந்த உண்மைகளை சிறுமி தெரிவித்தாள். இதையடுத்து லொகர்தாதா காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் சிறுமி கூறியுள்ளதாவது:

என்னை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்களுக்கு 13 முதல் 15 வயதுக்குள்தான் இருக்கும். எனது பள்ளி தோழர்கள் என்பதால் ஏற்கனவே பலமுறை அவர்களுடன் வெளியே சென்று சுற்றியுள்ளேன். திடீரென அவர்கள் என்னிடம் தவறாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளாள்.

போலீஸ் விசாரணையின்போது, வகுப்பறை ஜன்னலை உடைத்து உள்ளே சென்று அதன் கதவுகளை மாணவர்கள் நால்வரும் திறந்துள்ளது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

மற்றொரு சிறுமி பாலியல் பலாத்காரம்:

அதேபோல மற்றொரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

அம்மாநிலத்தின் சிக்ரி பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியின் பெற்றோர், தங்களது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அவளது வீட்டுக்கு வந்துள்ளான். இனிப்பு அளிக்க வந்தது போல நாடகமாடி வீட்டுக்குள் சென்ற சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டான்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+