பாலியல் தொல்லை.. பெற்றோரிடம் கூறிய சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றிய இளைஞர்கள்!
டெல்லி: டெல்லியில் பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள், மைனர் சிறுமியை கட்டாயப்படுத்தி அமிலம் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சங்கம் விஹார் பகுதியில் வசித்து வரும் 10ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த சில வாரங்களாக பின் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர். இதனால் பயந்து போன அச்சிறுமி, இது தொடர்பாக தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்தனர் அவரது பெற்றோர். பின்னர் பள்ளி நிர்வாகம் அச்சிறுமிக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மீண்டும் அவர் பள்ளி செல்லத் தொடங்கினார்.
சிறுமி மீண்டும் பள்ளிக்கு வருவதைத் தெரிந்து கொண்ட அந்த இளைஞர்கள் மீண்டும் தங்களது தொல்லையைத் தொடங்கினர். நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து அச்சிறுமி வெளியே வந்தபோது, நுழைவு வாயிலிலேயே அவரை அந்த இளைஞர்கள் வழி மறித்துள்ளனர்.
பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அச்சிறுமியில் வாயில் அமிலத்தை ஊற்றிய இளைஞர்கள், அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்கள்.
வலியால் துடித்த அச்சிறுமியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது சிறுமியின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சமபவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications