தூய்மை இந்தியாவுக்கு 'துடைப்பம்' தூக்கி பாஜக தனக்குத்தானே வைத்துக் கொண்ட ”ஆப்பு”!
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி பெரும்பான்மையுடன் ஜெயித்தாலும் ஜெயித்தது... துடைப்பத்துடன் தூய்மை இந்தியா திட்டத்திற்கு போஸ் கொடுத்தது தப்போ என்று கலக்கத்தில் ஆழ்ந்து போயுள்ளனர் பாஜகவினர். துடைப்பம்தான் ஆம் ஆத்மியின் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும்நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குகளை அள்ளிக் குவித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது ஆம் ஆத்மி கட்சி.

எல்லா எதிர்ப்புகளையும் துடைத்தெறிந்து, மோடி அலையையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு எதிர்கட்சியே இல்லாத நிலைமை உருவாக உள்ளது தலைநகரில் இந்த வெற்றியால்.
இந்த நிலையில் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு ஒருவேளை பாஜகவின் பிரச்சாரம்தான் காரணமோ என்ற அரசியல் காமெடியும் தற்போது வலம் வரத் துவங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அறிமுகப்படுத்திய திட்டம்தான் "ஸ்வச்ச பாரத்" அதாவது "தூய்மை இந்தியா" திட்டம். இத்திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் வீதிவீதியாக விளக்குமாற்றுடன் சுத்தம் செய்யக் கிளம்பினர் பாஜகவினர்.

அதுமட்டுமல்ல தூய்மை இந்தியா என்ற பெயரில் விஐபிக்களும் தவறாமல் விளக்கமாற்றுடன் போஸ் கொடுக்க தவறவே இல்லை. ஏன் மோடியே கையில் துடைப்பத்துடன் குப்பைகளைக் கூட்டி தூய்மை படுத்தும் செயலில் ஈடுபட்டார் இத்திட்டத்திற்காக. தலைவர்களின் முகங்களை விட துடைப்பங்கள்தான் பிரதானமாக போஸ் கொடுக்க பயன்படுத்தப்பட்டன..
ஆனால், இதில் பெரிய திருப்புமுனை இந்த திட்டத்திற்கே ஆப்பு வைக்கும் அடிப்படையில் டெல்லி தேர்தல் முடிவுகளின் வழியாக வெளியாகியுள்ளது. டெல்லியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகும் ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் "துடைப்பம்" என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.
மோடியில் இருந்து பாஜகவின் கிரண் "லேடி" வரை எல்லோருமே கையில் துடைப்பத்துடன் போஸ் கொடுத்த காரணத்தினால்தான் டெல்லி மக்கள் குழம்பிப் போய் பாஜகவும் ஆம் ஆத்மிக்கே ஓட்டுப் போட சொல்கின்றது என்று விளக்கமாற்றைப் பார்த்து குத்தோ குத்தென்று குத்திவிட்டார்கள் என்று காமெடியாக பேசி வருகிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
குப்பையைக் கூட்டிப் பெருக்கி அள்ளிய பாஜகவினர், இந்த துடைப்பத்தால் தங்கள் தலையிலேயே மண் விழப் போவதை அறியவில்லை பாவம். இதற்குப் பெயர்தான் காதில் "பூ"வை செருகி, கையில் "துடைப்பத்தைக் கொடுப்பது" என்றும் கலாய்த்து எடுக்கின்றனர்.
"அப்போவே சொன்னோம் கேட்டீங்களா? அட்லீட்ஸ் எதிர்கட்சியாவாவது இருந்துருக்கலாம்... கையில் துடைப்பத்தை தூக்கி இப்போ மொத்தமா வாரிக் கூட்டித்த் தள்ளிட்டுப் போய்ட்டாங்க" என்று புலம்போ புலம்பென்று புலம்பித் தீர்க்கின்றார்கள் பாஜக விசுவாசிகள்.
போகிற போக்கைப் பார்த்தால் "தூய்மை இந்தியா" திட்டத்தின் காரணமாகத்தான் ஆம் ஆத்மிக்கு வெற்றி கிடைத்தது என்று பாஜக சொன்னாலும் சொல்லலாம் யாருக்கு தெரியும் நரம்பில்லா நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசலாம்தானே!
மேரா பாரத் மஹான்!
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications